Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் உடனடி கவனத்திற்கு..!


யாழ் முஸ்லிம்களை இந்திய வீட்டுத்திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்காக 2011ம் ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன, இதற்கமைய விண்ணப்பித்தோரில் 168 பயனாளிகளின் விபரங்களை யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் வெளியிட்டிருந்தது. இதற்கமைய ஜே-86, ஜே87, ஜே 88 ஆகிய கிராம அலுவலகர் பிரிவுகளில் இருந்து தெரிவான பயனாளிகளை இறுதியாகத்  தெரிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படவுள்ளன.

இச்செயற்திட்டத்திற்காக அதிகாரிகள்  வெள்ளிக்கிழமை முதல் (8-03-2013) முதல் (11-03-2013) இடம்பெறவுள்ளது. எனவே இந்திய வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்ட அனைவரும் தமது வீடுகளில் தங்கியிருந்து இந்திய வீட்டுத்திட்ட அதிகாரிகளிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் அறிவித்தல் விடுத்துள்ளது. 

எனவே இந்திய வீட்டுத்திட்டப் பயனாளிகளாக அடையாளம் செய்யப்பட்ட அனைவரும் குறித்த தினத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இத்தகவலை யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே முடியுமானவரை சென்றடைய வழி செய்யவும்.

No comments

Powered by Blogger.