Header Ads



அன்வர் மனதுங்கவை ஓரங்கட்ட முடியாது..!


(ஜே.எம்)

இன்றைய காலக்கட்டத்தில் பேரினவாதத் கருத்துக்களின் தாக்கம் காரணமாகப் பலரும் பல்வேறு இணையங்களை ஆவலுடன் வாசிப்பது வழக்கம். அவற்றுள் 'அன்வர் மனதுங்க' இணையம் முக்கியமான ஒன்று. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

'தயவு செய்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யக் கூடியவர்கள் முடியுமாயின் இதனை தமிழ் இணையம் ஒன்றில் பிரசுரித்து உதவவும்' எனக் கேட்கப் பட்டிருந்தது. 

කරුණාකර හැකියාවක් තිබෙන කෙනෙකු මෙම ලිපිය දෙමළට පරිවර්තනය කර දෙමල වෙබ් අඩවි වල පලකරන්න. ඉංග්රීසියට පරිවර්තනය කර මට එය එවන්න. 

எனக்கு எதிரான தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அது தொடர்பான ஒரு விடயம் நேற்றும் இடம் பெற்றது. (19.3.2013 திகதியிடப்பட்ட குறிப்பு) மூடப்பட்டுள்ள எனது கடையை பலவந்தமாக மூவர் திறக்க முயற்சித்த சம்பவம் அதுவாகும். எழுதுகோலாள் பொதுச் சேவைபுரியும் ஒருவருக்கு ஏற்பட்ட இந்நிலைமையை வண்மையாகக் கண்டிக்கிறேன்.

'அன்வர் மனதுங்க புலக்கை' ஆரம்பித்து மிகச் சிறிது காலமே எனக்கு இலங்கையில் வாழ முடிந்தது. எனக்கு அடிக்கடி மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதன்காரணமாக நான் நீண்டகாலம் பாவித்து வந்த கையடக்கத் தொலைபேசி இலக்கத்தைக் கூடக் கைவிடவேண்டி வந்தது. காரணம் அந்த அளவு பயங்கரவாதிகளில் பயமுறுத்தல் இருந்து வந்தது. பின்னர் நான் உலகில் பலபாகங்களுக்கும் சென்று வந்த போதும் இலங்கை பற்றிய சிந்தனையே எனது உள்ளத்தில் இருந்தது. இதன்காரணமாக நான் மீண்டும் இலங்கைக்கு வந்தேன்.

இருப்பினும்  என்னை அடிக்கடி தீவிரவாதிகள் தேடிவருவதாகவும் என்னைப் பற்றிய தகவல்களை அறிய யாரிடம் முட்பட்டனரோ அவர்களே என்னிடம் அது பற்றிக் கூறினர். 

நிலைமை வர வர மோசமடைவதை அவதானித்த நான் எனது ஒரு கடையை மூடிவிட்டு மற்றக் கடையை இன்னொருவருக்கு ஒப்படைத்து விட்டு வெளி நாடு சென்றேன். தற்போது வெளிநாடு ஒன்றில் இருந்து கொண்டுதான் 'அன்வர் மனதுங்க புலக்கை' நடத்தி வருகிறேன். எனக்கு நேற்று அறியக் கிடைத்தது எனது மூடப்பட்ட ஒரு கடைக்கு வந்து மூன்று பேர் அதை பலவந்தமாக திறக்க முயற்சித்துள்ளனர். அயலவர்கள் இது விடயமாக தமது எதிர்பைத் தெரிவித்த போது அவர்களுக்கு பயமுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அக்கோஷ்டி பலரிடம் என்னைப் பற்றி விசாரித்துள்ளனர்.

தீவிர வாதிகளால் பல்வேறு வன்செயல்களும் நாசகாரச் செயல்களும் மேற்கொள்ளும் போது நாம் செய்யவேண்டியது மிகப் பொறுமையாக இருந்து அதற்கு எதிராக எமது எழுதுகோளைப் பயன் படுத்துவதாகும். அவர்கள் பொது மக்களுக்கு மத்தியில் குரோத மனப்பான்மையை வளர்க்கும் போது நாம் எழுத்தின் மூலம் தெளிவு படுத்துவோம். அதற்காக எமக்குள்ள ஆயுதம் எழுதுகோள் மட்டுமே. 

இங்கு எமக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. எழுது கோளைப் பயன் படுத்த பொருத்தமான ஒரு இடமாக இலங்கை இல்லை என்பதே அது. இருப்பினும் தெளிவு படுத்தும் விடயத்தை நாம் தொடர்ந்து முன் எடுப்போம். இப்படியான வற்றைக் கொண்டு அன்வர் மனதுங்கவை ஓரங்கட்ட முடியாது.

ஏ... பயங்கரவாதிகளே! என்னை உங்களால் தவிர்ந்து கொள்ள முடியாது. முடியுமாயின் எனது உயிரைப் பறிக்கலாம். அப்போது இன்னும் அன்வர்கள் ஆயிரமாயிரம் பேர் உருவாகலாம். அவர்களைத் தடுக்க இன்னும் ஆயிரமாயிரம் நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

குறிப்பு-

முடியுமாயின் இதனை தமிழில் மொழி மாற்றம் செய்து தமிழ் இணையத்தில் பதிவேற்றவும். ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து எனக்கு அனுப்பி வைக்கவும்.

அதன் சிங்கள வடிவம் இதோ-

මට විරුද්ධව නැවත වතාවක් අන්තවාදී තර්ජන මතුවෙමින් පවතී. ඒ සම්බන්ධව ආසන්නම සිදුවීමක් ඊයේ වාර්තා වුණා. ඒ මගේ වසා ඇති කඩයකට තිදෙනෙකු පැමිණ බලෙන් විවෘත කිරීමට උත්සාහ දැරීමත් සමගයි. පෑන තුලින් ජනතා මෙහෙවරක් කරන අප වැනි අයට මෙලෙස තර්ජන ගර්ජන එල්ලවීම ගැන මම කණගාටු වන අතර දැඩි පිළිකුළෙන් යුතුව හෙලා දකිමි.

අන්වර් මනතුංග බ්ලොගය අරඹා මට ලංකාව තුල යහතින් සිටින්නට හැකි වුයේ ඉතා සුළු කාලයක්. ඉන් පසුව මට නිරන්තරව මරණ තර්ජන එල්ල වුණා. එතෙක් කලක් මම භාවිතා කළ දුරකථන අංකය පවා වෙනස් කිරීමට සිදු වුණේ එයට විශාල වශයෙන් අන්තවාදීන් තර්ජනය කරන්නට වීම නිසයි. තත්වය දරුණු අතට හැරෙන්නට වීමත් සමග මම මගේ ලංකාවේ කටයුතු අතහැර දමා විදෙස් ගත වන්නට තීරණය කලා. රටවල් කිහිපයක සංචාරය කළද මගේ සිත තිබුණේ ලංකාවේ නිසා නැවත ලංකාවට පැමිණියා.

එහිදී අන්තවාදී සංවිධාන විසින් සෘජුවම මාව සොයන බවට දැනගන්නට ලැබුණේ ඔවුන් මා ගැන විපරම් කරන සෑම පුද්ගලයෙකුම නැවත ඒ ගැන මට දන්වන නිසයි. තත්වය එන්න එන්නම නරක අතට හැරෙන විට මා කළේ මට ඇති එක කඩයක් වසා දමා අනෙක් කඩය තව කෙනෙකුට පවරා විදෙස් ගත වීමයි. දැන් මා අන්වර් මනතුංග බ්ලොගය පවත්වාගෙන යන්නේ විදෙස් රටක සිටයි. ඊයේ දිනයේද මට අයත් එක් කඩයකට පැමිණි තිදෙනෙකු විසින් එම කඩයේ දොර බලෙන් විවෘත කිරීමට උත්සාහ දරා ඇත. ඒ ගැන අවට අය විරුද්ධ වු විට ඔවුන් ඒ අයටද බැනවැදී ඇත. එමෙන්ම ඔවුන් තවත් ස්ථාන වලින්ද මා ගැන විපරම් කර ඇති බවට තොරතුරු ඇත.

අන්තවාදීන් විසින් නොයෙකුත් අන්දමින් ත්රස්ත සහ ප්රචන්ඩකාරී ක්රියා කරන විට අප කළේ එයට විරුද්ධව නිර්භීත ලෙස පෑන හැසිරවීමයි. ඔවුන් ජනතාව අතර වෛරය පතුරවන විට අප ජනතාව දැනුවත් කමින් සන්නද්ධ කිරීමට අඛන්ඩව උත්සාහ දැරුවෙමු. අපගේ එකම අවිය වුයේ පෑනයි. මෙයින් අපට එකක් පැහැදිලිය. ලංකාව පෑන හසුරුවන්නන්ට යහපත් තැනක් නොවන බවයි. කෙසේ වුවද අප අපගේ දැනුවත් කිරීමේ මෙහෙය අඛන්ඩව කරමු. මේ කිසිවකින් අන්වර් මනතුංගව නිහඬ කළ නොහැකි බව අප අවධාරණය කරමු.

අවසන් වශයෙන් මා පවසන්නේ අන්තවාදීනි! ඔබට මා වැලැක්විය නොහැක. හැකි නම් මා මරන්න! ඔබට කළ හැකි අවසන් දෙය එයයි. නමුත් එවිට අන්වර් ලා දහසක් බිහිවනු ඇත. ඔවුන්ව වලක්වන්නට ඔබට දහසක් ක්රියා කරන්නට සිදුවනු ඇත.

ප.ලි.
කරුණාකර හැකියාවක් තිබෙන කෙනෙකු මෙම ලිපිය දෙමළට පරිවර්තනය කර දෙමල වෙබ් අඩවි වල පලකරන්න. ඉංග්රීසියට පරිවර්තනය කර මට එය එවන්න. 



1 comment:

  1. naan anwer manathunga blog in oru waasahan,,prachchimahai sariyaana koanaththil nAdunilamai thawaraathu anuhuwathil kai thearnda oruwar than anwar. awarukku allah uthawi puriwaanaha

    ReplyDelete

Powered by Blogger.