வடமாகாண முஸ்லீம்களின் மீள் குடியேற்றமும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சிணைகளும்
1990ம் ஆண்டு வடமாகான முஸ்லீம்கள் விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்டு இலங்கையின் பல பாகங்களிலும் அகதிகளாக வெளியேறி இன்றுடன் 22 வருடங்களைக் கடந்து விட்டன.
ஆனால் இன்னும் அம்மக்களை சொந்த மண்ணில் குடியேற்றுவதற்கான பூரண ஒழுங்கமைப்பை அரசாங்கம் இதுவரை காலமும் மேற்கொள்ளவில்லை. ஆனால் 2007ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கையின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மட்டும் குடியேற்றுவது மற்றும் அபிவிருத்தி செய்வதில் உலக நாடுகளும் இலங்கை அரசாங்கமும் கவனம் செலுத்தி வருகின்றது.
இருந்த போதும் 2009 முதல் முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த பிரதேசங்களிலே குடியேறி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அம்மக்களின் மீள் குடியேற்றம், புணர்வாழ்வு, மீள்கட்டுமான பணிகளை மேற்கொள்வதில் கரிசணை காட்டப்படுவதில்லை. குறிப்பாக இம்மக்கள் பின்வரும் பிரச்சிணைகளை எதிர் நோக்கி வருகின்றனர்.
1. வாழ்வாதாரம்
2. காணி
3. பாதை மற்றும் போக்குவரத்து
4. குடி நீர் மற்றும் சுகாதாரம்
5. வீடமைப்பு
6. கல்வித்துறை
இவ்வாறான பிரச்சிணைகளை மீளக்குடியேறிய மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள முஸ்லீம் மக்கள் குறைகூறுவதை காணக்கூடியதாகவுள்ளது.
தற்போது கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராக இருக்கின்ற .றிசாட் பதியுதீன் முன்னர் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்த போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2007ம் ஆண்டு இடம் பெயர்ந்த தமிழ் மக்களை மீள் குடியேற்றம் செய்வதில் மிக்க அக்கறையோடு (24ஒ7) மணி நேரமும் சேவையாற்றி உலக நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றார். ஆனால் அவர் முஸ்லீம்கள் மீள்குடியேற்றத்தில் கூடிய அக்கறை காட்டவில்லை காரணம் அவர் இனவாதம் பார்க்கவி;ல்லை. அடுத்த கட்டமாக முஸ்லீம்களை மீள் குடியேற்றலாம் என்ற நம்பிக்கையோடு செயற்பட்டார். ஆனால் துரதிஸ்டம் அவர் வகித்த மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு மாற்றப்பட்டதனால் அவரால் பூரணமாக முஸ்லீம்களின் விடயத்தில் தனது இலக்கை அடையமுடியவில்லை.
தற்போது முஸ்லீம்களின் மீள் குடியேற்ற விடயங்களை முன்னெடுக்க முற்படும் போதெல்லாம் ஒரு சில அரசியல் கட்சிகள் மற்றும் சமய போதகர்களின் குறுகிய எண்ணப்பாடுகளினால் மக்கள் மத்தியில் பிழையான எண்ணப்பாடுகளை தூண்டி விட்டதுடன் இரண்டு சமூகங்களையும் தூண்டி மீண்டுமொரு கசப்புணர்வை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறான குருகிய சிந்தணையுள்ளவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். 1990 – 2010 ஆண்டு வரை உள்ள காலப்பகுதியில் முழு வளப்பங்கீடுகளும் அங்கு வசித்த தமிழ் மக்களையே சென்றடைந்தது. ஆனால் அப்போதும் முஸ்லீம் மக்கள் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வந்தனர்.
குறிப்பாக காணி விவகாரம், வாழ்வாதாரம், வீடமைப்பு ஏனைய உட்கட்டுமான அபிவிருத்தி திட்டங்கள், மற்றும் தொழில் வாய்ப்பு என்பன முழுமையாக தமிழ் மக்களையே சென்றடைந்தது. அவ்வேளையில் முஸ்லீம் மக்கள் பங்கு கேட்கவும் இல்லை.
ஆனால் தற்போது முஸ்லீம்கள் மீள்குடியேறி சொற்ப அநுகூலங்களைப் பெறும் போது மட்டும் சின்னத்தனமாக நடந்துகொள்வது வேதனை அளிக்கின்றது.
கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுத் தவறை சீர் செய்ய வேண்டிய இவர்கள் எதிரிடையான கருத்துக்களை வெளிப்படுத்துவது மீண்டும் முஸ்லீம்கள் மீள் குடியேறுவதை அங்கீகரிக்கவில்லை என்பதனை சுட்டிக் காட்டுகின்றது.
இவ்வாறான எதிரிடையான கருத்துக்களை பரப்புபவர்களுக்கு ஒரு விடயத்தை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். முஸ்லிம்கள் எப்போதும் தமிழ் மக்களுக்கு விரோதமானவர்கள் அல்லர். அதே நேரத்தில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் அமைதி மற்றும் விட்டுக்கொடுப்புகளை செய்யத் தயாராகவே உள்ளனர். இவை பயத்துக்காக அல்ல இரண்டு சமூகத்தின் ஒற்றுமைக்காகவும் எமது மாகாணத்தின் அபிவிருத்திக்காகவுமேயாகும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகண இணைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான பிரச்சினை என்பது தமிழ் மக்களுக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல மாறாக முஸ்லிம்களுக்கும் உரியது. அதனால்தான் எமது பிரச்சினை என்று கூறுகின்றோம். இப்பிரச்சினையில் தீர்வு வேண்டுமானால் இரு சமூகங்களிடையேயும் புரிந்துணர்வு, சகோதரத்துவம், விட்டுக்கொடுப்பு மற்றும் நேர்சிந்தனை என்பன அவசியமாகும்.
எனவே இரு சமூகங்களும் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்புணர்வை மறந்து இனங்களுக்கிடையே சகோதரத்துவம் புரிந்துணர்வு மற்றும் விட்டுக்கொடுப்பு என்பவற்றை செய்வதற்கு இருசமூகங்களுக்கு மத்தியில் ஏற்படுத்துவதற்கு அரசியல் தலைவர்கள் மதப்போதகர்கள் புத்திஜீவிகள் அனைவரும் ஒன்றுபடவேண்டிய கட்டாயத்தருணத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை மறந்துசெயற்பட முடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
Post a Comment