எம்மை யாரும் நகர்த்த முடியாமல் பலமாய் நிற்போம்..!
(MIFRAAZ SHAHEED - TIANJIN MEDICAL UNIVERSITY - CHINA)
தற்போதுள்ள சூழ்நிலையை அவதானிக்கும் போது பொது பல சேனா மூக்குடைபட்டுக் கொண்டிருக்கிரார்கள் போல தான் தென்படுகின்றது. நிறுவனங்களின் உரிமையாளர்கள் எமக்கு ஹலால் வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறார்கள். பாராளுமன்ற கட்டிடதொகுதிக்குள்ளேயே குரல் எழுப்பியுள்ளார்கள். அதற்குள் ஹெல உறுமயவுக்கு ஹலால் விடயத்தில் தலை போட வேண்டாம் என்று மிரட்டல் வேறு, தாம் தான் நாட்டாமை செய்ய வேண்டுமாம்.
கீழே விழுந்தும் மீசையில் மண் ஓட்டாதவன் போல நாள் ஒரு அறிக்கையும் பொழுதொரு போஸ்டருமாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவர்களின் செய்திகளை பத்திரிகையிகில் அரசியல் பக்கத்தில் எழுதுவதா, இல்லை நகைச்சுவை பக்கத்தில் எழுதுவதா என்று பெரும் குழப்பமாக உள்ளது.
முஸ்லிம்களை அவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடுப்பேத்திப்பார்தார்கள். ஆனால் ஒருவன் கூட வலிந்து சண்டைக்கு வாரான் இல்லை என்பதை நினைக்கும் போது, அவர்களின் அடிமனது கருகி போய்தான் இருக்கும். எமது அமைதியும் சாணக்கியமும் எல்லா நேரத்திலும் அரசின் மேல் மட்டத்துடனான அனுகளும் அவர்களை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல விடாமல் முடக்கிப்போட்டது. இது நமக்கு பெரும் வெற்றியே!!
ஏனெனில் இங்கு தலையங்கம் ஹலால் இல்லை. அவர்களின் நோக்கு சர்வதேசம் எந்த உக்தியை கையாண்டு முஸ்லிம்களின் மேல் தீவிரவாத முத்திரை குத்தியதோ அதுதான். அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளில் ஒன்று தான் நம்மட இந்த ஹலால்.
சர்வதேசம் கையாண்ட அந்த மடத்தனமான உக்திக்கு சில இலட்சம் கலிமா சொன்ன உயிர்கள் வேணும் என்றால் பலியாகி இருக்கலாம். ஆனால் இஸ்லாம் ஐரோப்பாவின் நடிகைகள், மொடல்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் வாதிகள் என்று போய் இன்று சும்மா இருந்த நம்மட பாப்பரசரையும் ஒரு காட்டு காட்டியிருக்கின்றது, எங்கட மொட்டை தலைகளுக்கு இன்னும் புரியல போலும். அவர்கள் இன்னும் தலிபானுக்கும் ஹமாசுக்கும் பணம் போகும் flow chart க்கு Norway யின் website இல் ஆதாரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்ப நம்ம பக்கத்துக்கு வருவம்.. பல திக்கிலும் இருந்து உதித்த ஒரு ஏக்க குரல், இன்று ரன் முத்து ஹோட்டலிலே எதிரொலித்து, தங்கத்தை விட முத்தை விட பெருமதியான அளவுக்கு, முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு தலைமையை தேடி தர போகுது, என்று நினைக்கும் போது மனம் அல்லாஹ்வுக்கு சுஜூது செய்கின்றது. alhamdulillah.
கடந்த 50 ஆண்டுகளாக இணைக்க முடியாமல் இருந்த எமது இயக்கங்களை இந்த பொது பல சேனா இணைத்ததற்கு திறை மறைவில் நன்றி கூறித்தான் ஆகவேண்டும்.
எமது அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் மட்டுமாவது கருத்தொற்றுமை பட்டார்கள் என்று கேக்கும் போது காதுக்கு இனிமையாக தான் இருக்குது, ஆனால் இனியும் ஒன்றுபடாவிட்டால் எந்த முகத்தோடு தேர்தல் மேடையில் மைக்கை பிடிப்பது என்ற ஒரு comments உம் இன்னும் மண்டைய உரைச்சுக்குதான் இருக்கு, அதை அப்படியே விட்டுவிடுகின்றேன். ஏனெனில் அவர்கள் ஒன்று சேர்ந்தாலும் குற்றம் ஒன்று சேராவிட்டாலும் குற்றம் என்று ஆகிவிடக்கூடாது.
ஆனால் இறுதியில் ஒன்று மட்டும் இன்னும் இடிக்குது. நம்மட இந்த மொட்டை தலைகள் அரசாங்கத்துக்கு எதிரான கூட்டமா..?? அதனால் தான் அரசாங்கம் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று கவனமாக காய் நகர்த்துகிறதா?? இல்லை பொது பல செனாவையே அரசாங்கம் தான் நகர்த்துகிறதா?? அதான் இன்னும் புரியல...!
ஒற்றுமை எனும் கையிற்றை பற்றிப்பிடித்துக்கொள்வோம்..!
எம்மை யாரும் நகர்த்த முடியாமல் பலமாய் நிற்போம்...!!
Interesting and true. Whatever it is, we need some transition in our All Ceylon Jamiathul Ulama in order to face and overcome, when crisis arise like this. I think, Our ACJU has limited its members to only Ulamas, as we have not noticed anybody else speaking on behalf of ACJU. Muslim Intellectuals, Professionals like leading lawyers, Medical doctors, senior journalists and public sector administrative officers are also to be included, so that the ACJU will have vast and wide knowledge in all subjects to face this kind of crisis!
ReplyDeleteவேஷம் கலைந்து ஓநாய் ஓலமிட ஆரம்பித்து எல்லாவற்றுக்கும் கோட்டாபய தான் காரண கர்தா என்பது இன்று பொதுபலசேனையின் தீவிரவாத தலைமைய்கத்தை திறந்து வைத்ததில் இருந்து வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது இனவாத்தை அன்றி இந்த அரசுக்கு வேறு வழியில்லை அடுத்த தசாப்த அரசியலுக்கு என்பதால் அரசே பொதுபலசேனையை முழுமையாக திட்டமிட்டு ஒழுங்கமைத்து வழி நடத்திகொண்டிருக்கிறது
ReplyDeleteالله كريم
ReplyDelete