மொபைல் போனில் வீடியோ பதிவு - பாகிஸ்தானில் தடை
பாகிஸ்தானில், வாடிக்கையாளர்களின் மொபைல்போன்களில், பாடல்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து தர, மொபைல்போன் விற்பனையாளர்களுக்கு, தலிபான்கள் தடை விதித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள தலிபான்கள், அந்நாட்டு மக்களுக்கு தடைகளை விதித்து வருகின்றனர்.
ஆபாசத்தை பரப்புவதாக கூறி, நூற்றுக்கணக்கான மொபைல்போன்கள், கம்ப்யூட்டர்களை கடந்த ஆண்டு,வாஜிரிஸ்தான் பகுதியில், இவர்கள், தீயிலிட்டு எரித்தனர். இந்நிலையில், பெஷாவர் நகரில், வாடிக்கையாளர்களின் மொபைல்போன்களில், பாடல்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து தருவதை, தலிபான்கள் தடை செய்துள்ளனர்.
இது தொடர்பாக, அந்நகரில் உள்ள விற்பனையாளர்களுக்கு, அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். "மீறினால், குண்டு வெடிப்புகள் நடக்கும்' என, அவர்கள் மிரட்டியுள்ளனர்.இதனால், மிரண்டு போன, அப்பகுதி மொபைல்போன் கடை உரிமையாளர்கள், "மெமரி கார்டு'கள் உள்ளிட்ட சாதனங்களை விற்பதில்லை, என, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
very good warning, the government must do it and you avoid doing bombs against human because no rights to do it.
ReplyDelete