Header Ads



போகம்பறைச் சிறைச் சாலையின் புதிய பிரிவு


(J.M.Hafees) 

870 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட போகம்பறைச் சிறைச் சாலையின் புதிய பிரிவு இன்று 25-03-2013  பல்கேலையில் பிரதமர் டி.எம்.ஜயரத்னாவினால் கோலாகளமாகத் திறந்து வைக்கப்பட்டது. (25.3.2013) சிறைக்கைதிகள் நவீன வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

பத்து ஏக்கருக்கும் மேற்பட்ட விஸ்தீரணம் கொண்ட இச் சிறைச் சாலையில் 2500 ஆண்; மற்றும் 350 பெண் கைதிகளை பராமரிக்கக் கூடிய நவீன கட்டிடத் தொகுதியாக இது அமைந்துள்ளது. 

திறப்பு வைபவத்தை அடுத்து அங்கு உரையாற்றிய பிரதமர் தெரிவித்ததாவது-
இலங்கைக்கு 4000 வருட வரலாறு உண்டு. வால்மீகி இராமாயானா காவியம் இதற்குப் பதில் சொல்லும். ஆனால் அமெரிக்கர்களில் காற்பாதணிகளைக் கலற்றுபவர்களாகவும், அவர்கள் முன் தலை குனிந்து நிற்பவாகளாகவும் நாம் வாழ வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். 

மேற்குலகு இந்தியாவையும் இலங்கையையும் அவர்களது கட்டுப் பாட்டில் வைத்திருக்க நினைக்கிறது. காலணித்துவக் காலம் போன்று திருகோணமலை துறைமுகத்தை அவர்கள் வசமாக்கிக் கொள்ள முயற்சி செய்கிறது. எமது 4000 வருட அபிமானத்தையும், கலாச்சாரப் பண்பாடுகளையும் அவர்களுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்றார்.








1 comment:

  1. இனி நாட்டில் குற்றச் சொயல்கள் கூரையும் போல. நல்ல திட்டம் மாமா வீட்டு கவன்ப்பு ரோம்ப ஐாஸ்தி.

    ReplyDelete

Powered by Blogger.