தொடர்ச்சியான மழையினால் மன்னார்-முசலி விவசாயிகள் அவதி
(எஸ்.எச்.எம்.வாஜித்)
முசலி பிரதேச விவசாயிகள் தமது வயலில் அறுவடை செய்த நெல்லையும் இன்னும் அறுவடை செய்யாத நெல்லையும் விற்க முடியாமல் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக பெய்கின்ற மழையினால் வெயிலில் உலரவைக்க முடியாமல் விவசாயிகள் அவதிபடுகின்றனர்.கடந்த முறை தொடரச்சியாக பெய்த மழையினால் முசலி பிரதேசத்தில் உள்ள அதிகமான வயல் வெள்ளத்தினால் அழிவடைந்தன சில விவசாயிய அமைப்புகள் இன்னும் நீவாரணம் பெறவில்லை.
முருங்கன்-சிலாவத்துறை பிரதான வீதியில் உள்ள பீ.பீ. பொற்கேனியில் கமநெல சேவை திணைக்களத்திற்கு தேவையினை வீட அதிகமான உழவு இயந்திரங்கள் இருக்கின்றன இதனால் முசலி விவசாயிகஞக்கு ஏந்த வீதமான பயனும் இல்லை என விவசாயிகள் தெரிவிக்;கின்றனர். உழவு இயந்திரங்களை கொள்வனவு செய்தது போன்று அறுவடை இயந்திரங்களை கொள்வனவு செய்யப்பட்டிருந்தால் அதிகமான அறுவடை செய்யப்பட்டிருக்கும் என விவசாய அமைப்பின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் கவலை எப்போது தீரும்..?
Post a Comment