அபிவிருத்தி காணும் கல்பிட்டி-கொழும்பு வீதி
(எஸ்.எச்.எம்.வாஜித்)
கல்பிட்டி.கொழும்பு பிரதான வீதி பல வருடகாலமாக குண்டும்.குழியுமாக காணப்பட்டது அத்துடன் உள்ளக விதிகளுக்கு பெயர் பலகை பொருத்தனாலும் பல பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகளும் தபால் கடிதங்களை வினியோகிக்கும் உழியர்களும் பல வருடகாலமான அகௌகரியங்களை எதிர்நோக்கி வந்தார்கள். யாரும் அறிந்த விடயம் 2011 ஆம் ஆண்டிற்கு முன்னர் கல்பிட்டி பிரதேச சபைக்கு பல தவிசாளர்கள் இருந்தும் யாரும் இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்ய முன் வரவில்லை என அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.
இம்முறை நடைபெற்ற கல்பிட்டி பிரதேச சபை தேர்த்தளில் முஸ்லிம்.தழில் மற்றும் சிங்கள மக்களின் நன்மதிப்பினை பெற்று அதிகமான வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட கல்ப்பிட்டி பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.மின்ஹாஜ் அவரின் அயராத உழப்பின் காரணமாக உள்ளக விதிக்கான பெயர் பலகையும் மற்றும் விதி அபிவிருத்தியும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா தளங்கள் முலம் அரசாங்கத்திற்கு அதிகமான வருமானங்களையும் பெற்று கொடுக்கும் பிரதேசமாகவும் மாற்றி உள்ளார். இன்னும் அதிகமான அபிவிருத்தியும் மிக விரைவாக தற்போது நடைபெற்று கொண்டு வருகினறன.
1990 ஆண்டு காலப்பகுதியில் யுத்ததினால் இடம்பெயர்ந்து அதிகமான வடமாகண மக்கள் புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேசங்களில் மக்கள் அகதிகலாக வாழ்கின்றனர் இவர்களுக்கு தேவையான பல உதவிகளையும் செய்து கொடுக்கின்றார்.
பிரதேச தவிசாளருக்கு அப்பிரதேச மக்கள் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்ரனர்;.
Post a Comment