ஒரு லட்சத்து பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின்..!
ஒரு லட்சத்து பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின் "பான்ஸ்டார்ஸ்' என்ற வால் நட்சத்திரம் பூமியில் நேற்று முதல் தெரிய துவங்கி உள்ளது. 2011, ஜூன் 6ம் தேதி தான் இந்த வால்நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகே இந்த வால் நட்சத்திரத்திற்கு "சி/2011 எல்4' (பான்ஸ்டார்ஸ்) என பெயர் வைத்துள்ளனர்.
இன்னும் சில வாரங்களுக்கு பூமத்திய ரேகைக்கு வடக்கே பிரகாசமாக தெளிவாக தெரியும். மார்ச் 10ம் தேதி பூமிக்கு அருகில் வருவதால் மேலும் பிரகாசமாக தெரியும். வெறும் கண்களாலேயே இதை பார்த்து ரசிக்கலாம் என வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன் "பான்ஸ்டார்ஸ்' வால்நட்சத்திரம் பூமியில் எப்போது தெரிந்தது என கண்டறிய முடியவில்லை. இருப்பினும் மீண்டும் ஒரு லட்சத்து பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தான் பூமியில் தெரியும் என்கின்றனர். இந்த வால் நட்சத்திரம் ஒரு லட்சத்து இருபதாயிரம் கி.மீ., விட்டம் கொண்டதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். பூமியிலிருந்து 161 மில்லியன் கி.மீ., தொலைவில் இருக்கிறது.
Post a Comment