கிண்ணியா சம்மவச்சதீவு அஸ்ஸபா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி
(ரைஸ்)
கிண்ணியா சம்மவச்சதீவு அஸ்ஸபா வித்தியாலய மாணவ, மாணவிகளின் இல்ல விளையாட்டுப் போட்டி கிண்ணியா நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்தரணியின் அனுசணையோடு பாடசாலை அதிபர் உவைஸ் தலைமையில் ஆசிரியர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.
நகரபிதா அங்கு உரையாற்றும் போது 'நான் ஆசிரியராக கடமையாற்றிய காலகட்டத்தில் இந்த பாடசாலையில் நான் கற்பித்திருக்கின்றேன் அதனால் எனக்கும் இந்த பாடசாலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது இருந்தாலும் என்னால் இயன்ற உதவிகளை பாடசாலைக்கு செய்து கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது மாணவர்களுக்கு எப்போதும் பயனுள்ளதாக அமையும் ஒன்றாகும். மேலும் இங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் நல்ல முறையில் கல்வியினை போதித்து வளப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.' என தெரிவித்தார்.
சம்மவச்சதீவு அஸ்ஸபா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சுகாதார மற்றும விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ எம்.ஏ.எம். மன்சூர் வருகை தந்ததோடு கௌரவ விருந்தினர்களாக கிண்ணியா நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாதுள்ளா மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி ஆகியோர் கலந்து கொண்டனர். அத்தோடு முக்கிய பிரமுகர்கள் அப்பிரதேச பொதுமக்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நீங்க மாலையை போட்டுட்டு இருங்க,
ReplyDeleteநம்ம சமுகத்தை இல்லாமல் ஆக்க பார்க்குறாங்க,அதை பற்றி எந்த சிந்தனையும் இல்லை உங்களுக்கு"
உங்களுக்கெல்லாம் தேவை பேரும் புகழும் தான்!
"மறுமையில் ஒவ்வொருவருடைய பொறுப்பு பற்றி கேட்கப்படும்.
அப்ப சொல்ளிகோங்க!!!