கொழும்பு நடைபாதைகள் அபிவிருத்தி
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதன் ஒரு கட்டமாக கொழும்பு நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள நடைபாதைகள் அகற்றப்பட்டு அழகாகவும் நேர்த்தியாகவும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
கொம்பனித்தெரு யூனியன் பிளேஸிலுள்ள பிரதான பாதையின் நடைபாதைகள் அகற்றப்பட்டிருப்பதையும் புதிதாக நிர்மாணிப்பதற்காக கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இவ்வாறு நடைபாதைகள் அகற்றப்பட்டிருப்பதனால் பாதையால் செல்பவர்களும் வாகனங்களை ஓட்டி செல்பவர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment