Header Ads



ஓமான் நாட்டில் இலங்கை பெண்கள் நிர்க்கதி


வேலை வாய்ப்புக்காக ஓமான் நாட்டிற்கு சென்று நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியிருக்கும் ஆறு இலங்கைப் பணிப்பெண்க்ள தொடர்பில் தகவலகள் வெளியாகியுள்ளன. குருநாகல் பகுதி தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றின் ஊடாகவே இவர்கள் ஓமான் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனத்தின் ஓமானிலுள்ள கிளை அலுவலகத்தில் இந்த பணிப்பெண்கள் தற்போது தங்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக தாம பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொதுமுகாமையாளர் மங்கல ரந்தெனியவிம் தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த பணிப்பெண்கள் குறித்து ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். NF

No comments

Powered by Blogger.