ஹலால் ஹராமுக்காக மனிதனா..?அல்லது மனிதனுக்காக ஹலால் ஹராமா..??
சுருக்கமாக 'ஹலால்' என்றால் அனுமதிக்கப்பட்டவை 'ஹராம்' என்றால் தடுக்கப்பட்வை. உலகில் மனிதன் விரும்பக்கூடிய பொருள்கள் அங்கும், இங்குமாக பறந்து கிடக்கின்றன,அதேபோல் மனித உணர்வுகளால் விரும்பக்கூடிய செயல்களும், பழக்க வளக்கங்களும் உலக மக்கள் மத்தியில் வித்தியாச வித்தியாசமான முறைகளில் இருப்பதையும் நாம் காண்கிறோம். சில பொருள்களும் சில செயல்களும் சிலருக்கு விருப்பமாகவும், வேறு சிலருக்கு அவைகள் விருப்பமற்றவையாகவும் இருக்கின்றன. மனிதர்கள் இயற்கையாகவே சில பொருள்களை விரும்புவதிலும். வெறுப்பதிலும் சில செயல்களை செய்வதிலும், சிலதை செய்யாமல் இருப்பதிலும் தான் உலக மக்கள்pன் வாழ்வு அமைந்திருப்பதையும் நாம் காண்கிறோம் .
இவ்வாறான சமுகத்திற்கு மத்தியில் தான் மதக் கொள்கைகளும், மார்க்கக் கொள்கைகளும் புகுந்து கிடக்கின்றன. அவைகளும் தத்தம் விருப்பு வெருப்புக்களைக் கடைப்பிடித்தவர்களாகத்தான்; வாழ்கின்றனர். இவையனைத்துக்கும் மேலாக அரசாங்கமும் தனது விருப்பத்தை முழுமையாக மக்கள் மத்தியில் நிறை வேற்ற முயற்ச்சிகளையும் மேற்கொள்ளும் உதாரணமாக! வீதியில் வாகனம் செல்வதற்கு ஒழுக்கு விதிகளில் தடுக்கப்பட்டவைகளும் அனுமதிக்கப் பட்டவைகளும் இருப்பது போன்று மொத்தத்தில் மக்களை தன்கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் அரசாங்க அதிகாரிகளாலும், காவல் துறையாலும், சுகாதாரப் பகுதியாலும் கூறப்படுகின்ற கருத்துக்கமைய சிலதைத் தடுத்தும் பலதை அனுமதித்தும் இருக்கின்றன. பலகோடி மக்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட சிலர்தான் இச்சட்ங்களை உருவாக்குகின்றனர். இருந்தும், இதைப்பற்றி தர்க்கம் செய்ய மனிதர்கள் முன் வருவது மிகமிககுறைவு. காரணம் இவைகளின் பிரதிபலனை மக்கள் அனுபவிப்பதினாலும் எல்லா நாடுகளும் இது போன்ற சட்டங்களைப் பயன்படுத்துவதினாலும், அரசாங்கத்திடம் மக்களை கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் கையில் இருப்பதினாலும் குழப்பம் ஏற்பட வழிகள் மிகக் குறைவு.
அரசாங்கத்தாலும், காவல் துறையாலும் கூறுகின்ற கட்டளைகள் மக்களை பரிசோதிப்பதற்காக அல்ல, தடைகளை மீரிச் செயல்படுகின்றவர்களிடமிருந்து தண்டப்பணத்தை அரசாங்கம் அறவிடும், அல்லது சிறையில் தள்ளும் அச்சட்டத்தைப் பேனி நடப்பவர்களுக்கு எதுவும் கொடுக்கப்படவும் மாட்டாது.
ஆனால் இஸ்லாம் கூறும் ஹலால், ஹராம் மக்களை பரிசோதிப்பதற்காக படைப்பாளனால் இடப்பட்ட கட்டளைகளாகும். இதைப் பேணி நடப்பவர்களுக்கு நன்மைகளும், மறுமையில் சுவர்கமும், முறனாக நடப்பவர்களுக்கு தீமையும், மறுமையில் நரக நெருப்பும் படைப்பாளனிடம் உள்ளது என்று இஸ்லாம் கூறுகின்றது. அதிலும் மக்களை தீமையை செய்ய மக்களைத் தூண்டுபவர்களுக்குத்தான் அதிக தண்டனையும் அதைபோல் தானும் நன்மைகள் செய்து மக்களையும் நன்மைகளைச் செய்ய தூண்டுபவர்களுக்குத்தான் அதிக நன்மைகள் உள்ளது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.
அடுத்து, ஒரு பொதுவான நியதியின் அடிப்படையிலேயேதான் பரீட்சை முறைகள் மனிதர்கள் தமக்கு மத்தியில் உருவாக்கி இருக்கின்றார்கள். அதாவது முதலில் மனிதனுக்கு சுதந்திரம் இரண்டாவது தான் புரிந்து கொண்ட அல்லது தான் தெரிந்து கொண்ட விதம், மூன்றாவது தான் எடுக்கும் தீர்மானம், இம்மூன்று நிலைப்பாட்டையும் தாண்டியபிறகு தான் பரிட்சையில் ஏழுதப்பட்டவை சரியா,பிழையா என்பதை இணங்கான முடியும். மனிதனுக்கு நல்லகுணம் தீயகுணம் என்று இருகுணங்கள் இருக்கின்றன நல்லமுடிவுகளை எடுக்கும் போது சரியான அறிவு, தீயமுடிவை எடுக்கும் போது பிழையான அறிவு என்கின்ற முடிவுகளைத்தான் காண்கின்றோம். மாணவர்களுக்கு மத்தியில் நடைபெருகின்ற பரீட்சைகளும் அவை எப்பாடமாக இருந்தாலும் ஒன்று சரியான முடிவு அல்லது பிழையான முடிவு தான் எடுக்க வேண்டும்
இந்த அடிப்படையில் மனிதனுக்கு நல்லதை தூண்டக் கூடிய மலக்கும், தீமையை தூண்டக் கூடிய ஷைத்தானின் மனிதன் மரணிக்கும் வரை எல்லாமனிதர்களிடமும் இருந்து கொண்டே இருக்கும் படைப்பாளன் மனிதனை அழகிய தோற்றத்தில் படைத்து மனிதனுக்கு தேவையான உலக வளங்களையும் வசப்படுத்திக் கொடுத்து ஆரோக்கியத்தையும், பதவியையும், சுகத்தையும் வழங்கிய படைப்பாளனின் கட்டளையை மதித்து நன்றி செலுத்துகின்றானா அல்லது நன்றி மறந்து தீயவனாக இருக்கின்றானா என்பதைப் பரிசோதிப்பதற்காக படைப்பாளன் iஷத்தான் மூலம் தவறான எண்ணங்களையும், வழிகளையும் அமைத்து உலகத்தை அலங்காரமாக அமைத்துவிட்டான்.
எனவே, இஸ்லாம் கூறும் ஹலால் ஹராம் மனிதர்களை குழப்பத்தில் கொண்டுவரக் கூடிய ஆற்றல் அதற்கு இருக்கின்றது. அதற்கு காரணம் அந்த ஷைத்தானின் தான் . எனவே ஷைத்தானின் தூண்டுதலினால் உருவாகின்ற முடிவுகளையும், செயல்களையும் யார் யார் பயன் படுத்துகிறார்களோ அதனால் என்னன்ன கொடுமைகள் உலகில் நடைபெறுகின்றதோ அதன் பிரதிபலனை நிச்சயமாக படைப்பாளனினால் நாடியவர்களக்கு அனுபவிக்க வேண்டிவரும், மரணத்திற்குப் பின் மறுமை வாழ்க்கையொன்று உள்ளது. என்று இஸ்லாம் கூறுகின்றது. எனவே தான் இஸ்லாம் மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை தவறான வழிகளையும் சரியான வழிகளையும் வௌ;வேறாகப் படைப்பாளன் பிரித்து வைத்து விட்டான். முடிவெடுக்கும் உரிமையும், சுதந்திரமும் மனிதனுக்கு வழங்கி விட்டான்.
எனவே, மனிதனை நிர்ப்பந்தப்படுத்தி, ஆய்தமுனையினாளோ, அதிகார முனையினாலோ படைப்பாளனுக்கு மாற்றமான செயல்களைச் மக்களை செய்யவைக்கும் செயல், சாதனை படைக்கக்கூடிய செயலாக நிச்சயமாக அமையாது. போட்டி என்று ஒன்று இருக்குமானால் அதில் எந்தப் பகுதியினருக்கும் நிர்ப்பந்தத்தை தினிக்கக் கூடாது. ஒருவரை ஒரு இடத்தில் கட்டிவைத்து விட்டு 'வாடா சண்டை செய்து பார்ப்போம் என்று அழைப்பவரை வீரனா யாரும் கருதுவதில்லை. அதேபோல் வைத்தியர் ஒருவர் தன் எதிரியாகக்கருதும் நோயாளியின் உடலில் நோய்க்கிருமிகளை எதிர்க்க கூடிய சக்திகள் குறைவாக இருப்பதை அறிந்து அந்த நோய்க்கு ஒத்துவராத உணவுகளையும் உண்ணும்படி செய்து விட்டு அதன் பின் அந்த நோயாளியை நலம் விசாரிக்க அந்த வைத்தியர் முயற்சி செய்தால். அந்த வைத்தியரின் நடத்தை நேர்மையானதாக அமையாது. யாராக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு துணைபோக வேண்டிய வைத்தியர் ஆரோக்கியத்தை பாழ்படுத்தும் மனிதனாக இருப்பதினால் நிச்சயமாக அவர் வைத்தியராக முடியாது.
எனவே, இஸ்லாம் மனிதனை மனிதனாகவே மதிக்கிறது தன் தீய செயலின் காரணமாக மனிதன் தாழ்தோரிலும் தாழ்ந்தவனாக மாறுகின்றான். எனவே படைப்பாளனை நேசிக்கும் முறையான மனிதனை எவராவது தொந்தரவுகள் கொடுத்து மிக மோசமான சிரமத்தையும் ஏற்படுத்தினாலும் சிறிதளவும் சாதனைகள் செய்துவிட்ட விடயமாக இது அமையாது. காரணம்! உலகில் என்ன காரியம் நடந்தாலும் அது நல்ல காரியமானாலும் சரி தீய காரியமானாலும் சரி அல்லது அனைத்து மக்களும் சந்தோசப்படுத்தக்கூடிய விடயமானாலும் சரி இவையனைத்தும் நிச்சையம் மறுமையில் நடை பெறவிருக்கும் நிகழ்ச்சிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கொசுவின் இறகுகளைவிடவும் அட்பமானதாகும் என்று இஸ்லாம் கூறுகின்றது. உலகம் பரீட்சைக்குறிய தளமாகும்! கால வரையரைகள் இல்லாத நீடித்த மறுமை வாழ்க்கையென்று ஒன்று நிச்சயம் உள்ளது. அங்கே உள்ள சுகம் நிரந்தரமானது.தண்டனையும் நிரந்தரமானது என்று இஸ்லாம் கூறுகிறது.; உதாரணமாக! மாணவர்களை பரீட்சைக்கு நியமிக்கப்படும் நேரம் குறிப்பிட்ட சில நேரம் தான் பரிட்சை எழுதி முடித்த பின் அதன் பிரதிபலனை மரணிக்கும் வரை அம்மாணவர்கள் அனுபவிப்பதை நாம் கண் கூடாகக் கானும் உண்மையாகும்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த அரிய ஆராச்சியாளரும் தலைசிறந்த வைத்திய நிபுணருமான கலாநிதி களவுன் ஷபர்ட் என்பவர் பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் விளைவுகளை பின்வருமாறு விளக்குகிறார். 'பன்றி இறைச்சியில் ற்றிக்கனெல்லா என்ற கிருமி பரந்து கர்ணப்படுகின்றது. இது கிருமி நாசினிக்கோ அல்லது சுடுவதாலோ அழிப்பதாலோ இலகுவில் சாகமாட்டாது. பன்றி இறைச்சி உண்போர் இவ்வகைக் கிருமிகளால் ஏற்படும் ற்றிக்கினோசிஸ் எனும் நோய்க்கு ஆளாவர்'
'தானே செத்ததும் உண்பதற்கு தடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பிராணியும் அது இறந்தவுடன் அதன் இரைப்பையிலுள்ள கிருமிகள் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவுகின்றது. இந்த மாமிசத்தை உட்கொள்வதால்உணவு விஷமாகும் தீங்கு ஏற்ப்படுகின்றது. இது நவீன கால வைத்தியக் கலாநிதிகளின் முடிவாகும்.' ( நூல்:- அல் குர்ஆன் ஓர் அறிவியல் கண்ணோட்டம் பக்கம் 170இ171 ல் இருந்து பெறப்பட்டது)
பன்றி மலம் தின்னும் ஒரு விலங்கு அதேபோல் எந்தக் கோழி மலம் சாப்பிடுகிறதோ அந்தக் கோழியை உண்ணமுடியுமா? என்ற கேள்வி வந்தால் அதற்கு பதில் மலம் உண்ணும் பிரானிகளை உண்பதற்கு தடுக்கப்பட்டிருப்பதனால் அந்தக் கோழியையும் உண்ணமுடியாது.
யாவையும் படைத்த படைப்பாளனுக்கு ஒவ்வொரு பொருள்களின் ஞானமும் முழுமையாக இருப்பதினால் மனித உடலுக்கு தீங்கு விலைவிக்கக் கூடிய வஷத்துக்களை உண்பதற்கு அல்லது பாவிப்பதற்கு தடைசெய்வது படைப்பாலனுக்கு சுகமான விடையமாகும். ஆனால் மனிதனின் நிலை அனுபவத்தினாலும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்தபின்தான் அதன் விளைவை உணரமுடிகிறது.
எனவே, இதுபோன்ற ஆய்வுகளை முஸ்லிமாகட்டும் பௌத்தராகட்டும் கிறிஸ்தவராகட்டும் யூதராகட்டும் இந்துவாகட்டும் படைப்பாளனின் வரம்புகளுக்கு உற்பட்டு மனித உடலுக்கு ஒத்துவரக் கூடியவைகளையும் ஒத்துவராதவைகளையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டினால் நேர்மையுள்ள மனிதனும் சுகாதாரத்தை பேணக்கூடிய மனிதனும் படைப்பாளனுக்கு நன்றி செலுத்தக்கூடிய மனிதனும் அதைக் கடைப்பிடித்து நடப்பதில் பின்வாங்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்
எந்ந உணவில் என்ன கெடுதியிருத்தாலும் பரவாயில்லை யார் யார் ஏமாற்றப்பட்டாலும் பரவாயில்லை தனக்குப் பணம் கிடைத்தால் போதும் என்ற மனப்பாங்குடன் வாழ்பவர்கள் பலர் இருக்கின்றனர் வியாபாரத்தின் மூலம் மனிதர்களை ஏமாற்றுவதும் ஒரு கலையாகவே மாறிவிட்டது எனவே தான் அரசாங்கமும் மனித உடலுக்கு கேடு விளைவிக்கின்ற பல விடயங்களை சுட்டிக்காட்டி எச்சரிக்கின்றது அதை அரபு வார்தையில் ஹலால் ஹராம் என்று சுட்டிக்காட்டா விட்டாலும் மக்கள் புரி;ந்து கொள்ளக்கூடிய வார்தைகளைக் கொண்டு தடுக்கவும் செய்கின்றனர்
எனவே தற்போது ஏற்ப்பட்ட குழப்பம் உண்மையை புரியாமலும் பொறாமையாலும் ஏற்ப்பட்ட பிரச்சனையாகும்.
எனவே, இஸ்லாம் தடைசெய்யும் விடயங்களையும்,அனுமதித்த விடயங்களையும் விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்தால் அதிகமானவை ஹலால் ஹராம் மனிதனுக்காகத்தான் என்பதை காணமுடியும். இஸ்லாத்தின் அடிப்படையில் இதைப்பார்த்தால், படைப்பாளனின் கட்டளைகளை கவனத்தில் எடுத்து மனிதன் கடைப்பிடித்து நடக்கின்றானா என்பதைப் பரிசோதிப்பதற்காக அதாவது, ஹலால் ஹராமுக்காகத்தான் மனிதன் படைக்கப் பட்டிருக்கின்றான் என்பதை காணமுடியும்.எனவே குழப்பம் செய்வது கொலையை விடவும் கொடிய செயலாகும்.என்பதை பெரும்பாலான மனிதர்கள் அறியாதவராகவே இருக்கின்றனர்
எனவே, படைப்பாளனை நேசித்து பின்பற்றும் உண்மையான மனிதனுக்கு தீமையான சூழலை சந்திக்க நேரிட்டாலும் அவர் கூற வேண்டிய வார்த்தை 'நிச்சயமாக நாங்கள் படைப்பாளனுக்கு (அல்லாஹ்வுக்கு) உரியவர்கள் நிச்சயமாக நாங்கள் அவனிடமே மீளக் கூடியோர் யாஅல்லாஹ் (படைப்பாளனே) எனக்கு ஏற்படும் சோதனைக்கு எமக்கு கூலியைத் தந்திடுவாயாக! அதன் பின்னால் அதைவிடச் சிறந்ததை (மறுமையில்) எனக்கு அருள்வாயாக! என்று பிராத்திக்க வேண்டும் எனக் கூறுகிறது.
எனவே நேர்மையாக சிந்திக்க ஆற்றல் பெற்றிருக்கும் மனிதர்களே! நாம் பயனிக்கும் வழி சரியா என்பதை தெளிவாக அறிவது தான் சிறந்த அறிவு பொய்களைக் கொண்டு உண்மையை நிரந்தரமாக மறைக்க முடியாது என்பதை நிச்சயமாக மனிதன் உணரும் காலம் வந்தே தீரும்.
Post a Comment