இஸ்ரேல் பலஸ்தீன் விவகாரத்தில் ஒபாமாவுக்கு இரட்டை நாக்கு..!
சுதந்திரமான, இறையாண்மையுடைய ஒரு நாடாக பாலஸ்தீனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்கா பாடுபடும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை தெரிவித்தார்.
அதிபர் ஒபாமா இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் இஸ்ரேல் சென்ற ஒபாமா அங்கு பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹுவைச் சந்தித்து உரையாடினார். பின்னர், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதிக்குச் சென்றார்.
ஜெருசலேமில், இஸ்ரேல் மக்களிடையே ஒபாமா பேசுகையில், "" பாலஸ்தீனர்களின் சுய நிர்ணய உரிமை, நீதி ஆகியவற்றை இஸ்ரேல் மக்கள் அங்கீகரிக்க வேண்டும்.
உண்மையான பாதுகாப்புக்கு அமைதி ஒன்றே வழி. பாலஸ்தீனர்களின் பார்வையில் உலகத்தைப் பாருங்கள். அவர்களின் நிலையில் இருந்து எண்ணிப்பாருங்கள். சொந்த நாடில்லாமல் பாலஸ்தீனக் குழந்தைகள் வளர்வது அழகல்ல. ஒவ்வொரு நாளும், தங்களின் பெற்றோரின் நடவடிக்கைகள் வெளிநாட்டு ராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் சூழலில் அக்குழந்தைகள் வாழ்வது நல்ல விஷயம் அல்ல'' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பாலஸ்தீனம் சென்ற ஒபாமா, அதிபர் மஹ்மூத் அப்பாûஸச் சந்தித்தார். பின்னர் ஒபாமா, அப்பாஸ் இருவரும் ரமல்லாவில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ஒபாமா பேசியதாவது: தங்களுக்கென சொந்த நாட்டை அமைத்துக் கொள்ள பாலஸ்தீனர்களுக்கு உரிமை உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகள் தடைபட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். இதில் அமெரிக்கா தனது பங்களிப்பைச் செலுத்தும்.
சுதந்திரமான, இறையாண்மை மிக்க பாலஸ்தீன நாடு உருவாவதைக் காண அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. எத்தனை இடையூறுகள் நேர்ந்தாலும், அமைதியைப் பேணுவதில் பாலஸ்தீனர்கள் விட்டுக் கொடுக்கக்கூடாது.
அதிபர் அப்பாஸýடன், இஸ்ரேல் யூதக் குடியிருப்பை அமைத்து வருவது உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதித்தேன். அமைதியைக் குலைக்கும் அத்தகைய குடியிருப்பு அமைவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதை, இஸ்ரேல் பிரதமர் நெதான்யாஹுவிடமும் தெரிவித்துள்ளேன்.
இரு தரப்பிலும் விரும்பத்தகாத நிகழ்வுகள் இருப்பினும், சில உடன்பாடுகளை ஏற்க மறுக்கும் காரணிகள் இருப்பினும், நன்னம்பிக்கையைக் குலைக்கும் செயல்கள் இருப்பினும் அவற்றைக் களைய இருதரப்பும் முன்வர வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளை ஒதுக்கி விட்டால், அக்காரணங்களைக் காட்டி சில செயல்களை முன்னெடுத்துச் செல்வதை தடுக்க வேண்டியதில்லை என்று ஒபாமா தெரிவித்தார்.
இஸ்ரேலில் உள்ள கூட்டணி அரசில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், சர்ச்சைக்குரிய ஜெருசலேமின் மேற்குப் பகுதியில் யூதக் குடியிருப்பு அமைவதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள். குடியிருப்பு அமைவதை தடுத்து நிறுத்தும் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உள்ளனர். இதையும் தனது பேச்சில் மறைமுகமாக வெளிப்படுத்திய ஒபாமா "இஸ்ரேலின் அரசியல் நிலவரம் மிகவும் சிக்கலானது, அதனை ஒரே இரவில் தீர்க்க முடியாது என்பதையும் நான் புரிந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
Post a Comment