லிபியாவால் தேடப்பட்டுவந்த கடாபியின் சொந்தக்காரர் எகிப்தில் கைது
லிபியாவை மும்மத் கடாபி ஆட்சி செய்து வந்தார். அவர் ஆட்சிக்கு எதிராக புரட்சி நடந்தது. 2011-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி புரட்சியாளர்களால் அவர் கொல்லப்பட்டார். நேற்று கடாபியின் உறவினரான அகமத் கடாபி அல் டாம், எகிப்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெய்ரோவின் சிறப்புத் தூதரக பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், 2011-ம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு லிபியாவிலிருந்து எகிப்துக்கு தப்பிச் சென்றார். லிபியாவில் முக்கிய பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரை லிபிய அரசு தேடி வந்தது. இந்த குற்றங்கள் குறித்த விபரங்களை எகிப்திடம் லிபியா வழங்கி இருந்தது.
இந்நிலையில் நேற்று அவர் தங்கி இருந்த குடியிருப்புப் பகுதியை எகிப்து போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அகமத் கடாபியின் பாதுகாவலர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் போலீசாரின் தாக்குதலை சமாளிக்க முடியாததால் எகிப்து போலீசாரிடம் அவர் சரணடைந்தார்.
Post a Comment