Header Ads



கடாபியின் குடும்பம் ஓமானில் தஞ்சம்


லிபியாவின் அதிபராக இருந்த முவம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக அந்நாட்டில் மக்கள் புரட்சி நடந்தது.

பல மாதங்கள் நீடித்த இந்த புரட்சியின் முடிவில் அதிபர் கடாபி, 2011-அக்டோபரில் பொதுமக்களால் கொல்லப்பட்டார். அவரது மகன்கள் இருவரும் புரட்சியாளர்களுடன் நடந்த போரில் கொல்லப்பட்டனர்.

லிபியாவின் அடுத்த அதிபர் என கடாபியால் அடையாளம் காட்டப்பட்ட மூத்த மகன் சயீப் அல் இஸ்லாமை ஆட்சியாளர்கள் கைது செய்தனர். அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் லிபியா கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.

கடாபியின் இன்னொரு மகன் நைஜீரியாவில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

லிபியாவின் ஆட்சியை புரட்சியாளர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, கடாபியின் மனைவி, மகன்கள், மகள் மற்றும் பேரன், பேத்திகள் அல்ஜீரியா நாட்டில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

அவர்கள் அங்கிருந்து வெளியேறி கடந்த அக்டோபர் மாதம் முதல் ஓமன் நாட்டில் தஞ்சம் புகுந்து அங்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்த தகவலை லிபியா வெளியுறவு துறை மந்திரி முகம்மது அப்துல் அஜீர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.