தொப்பி அணிந்தபடியே வெளியேறினேன் - இந்தியாவில் தாக்கப்பட்ட பௌத்ததேரர்
(ஜே.எம்.ஹபீஸ்)
காவி உடையைக் கலைந்து தம்பதிவ யாத்திரை மேற்கொள்ளவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹிக்தவுல உடுகம்பிடியே ரஜமகா விகாராதிபதி வதுபொல வங்கீச ஹிமி தெரிவித்துள்ளார்.
சென்னை நகரில் வைத்து தீவிர வாத இயக்கமொன்றால் தாக்கப்படடதாகச் சொல்லப் படும் இவர் தமக்கு ஏற்பட்ட நிலை பற்றி மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையைச் சேர்ந்த பல பிக்குகள் தம்பதிவ யாத்திரையை நிறைவு செய்த பின் சாரம் சேர்ட் அணிந்தகொண்டு சென்னை மகாபோதி நிலையத்திற்கு வந்தனர். எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை நான் எனது காவி உடையை கலைய மாட்டேன் என்ற திடசங்கற்பத்துடன் வந்தேன். இருப்பினும் தாக்கப்பட்டேன். காவி உடையில் ஏதேனும் மாற்றம் செய்துகொண்டு போகவும். இல்லாவிட்டால் மீண்டும் தாக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் புகையிரத நிலையத்தின் சில சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூறினார்கள்.
பின்னர் நானும அவ்வாறே குளிருக்கு அணியும் மேலங்கி ஒன்றையும் தொப்பி ஒன்றையும் அணிந்து கொண்டுதான் வெளியேறினேன்.
அவர்கள் தாக்கி விதம் எனக்கு காயம் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் ஒருவர் கெமராவுடன் வந்தார். அவர் அதனை சரிசெய்து 'ரெடி' என்றதுமே என்னை 'ஸ்ரீலங்கா...' என்று கூறிக்கொண்டு ஒருவன் தாக்கினான். இதன் மூலம் தெரிய வருவது நாம் தாக்கப்படுவதாக உலகுக்கக் காட்டுவதற்காகவே. அதன் மூலம் எம்மைக் கேவலப் படுத்துவாகும். நான் ஒருவாறு புகையிரதப் பெட்டியிலிருந்து குதித்து அங்குமிங்கும் ஓடி அடியின் தாகத்தைக் குறைத்துக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தாக்கப்பட்ட பௌத்த பிக்கு நேற்று கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தபோது அவரை பொதுபல சேனா பிக்குகள் வரவேற்றுள்ளனர்.
தொப்பி போடும் பறயாக்கள் (பறயா) என கன்டியில் நடந்த இவர்களின் கூட்டத்தில் ஏசியது யாருக்கு? தொப்பியின் மஹிமை இதிலாவது புரிந்திருக்கும்.
ReplyDeleteசிரிப்பதா அழுவதா?....
ReplyDeleteமுஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை கழற்றுவோம் என்று சொல்லி ஒரு மாதத்தினுள் காவியுடையை துறந்த துறவிகளே! அல்லாஹ் மிகப்பெரியவன்..
allahu akbar..
ReplyDelete