Header Ads



எயிட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றியதாக அமெரிக்கா அறிவிப்பு


அமெரிக்க மருத்துவர்கள், எச்.ஐ.வி., வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தையை, குணப்படுத்தி, சாதனை படைத்துள்ளனர்.அமெரிக்காவின், மிசிசிபி மாகாணத்தை சேர்ந்த, கர்ப்பிணி பெண்ணுக்கு, எச்.ஐ.வி., பாதிப்பு இருந்தது, பிரசவத்தின் போது கண்டறியப்பட்டது. 

அவருக்கு பிறந்த, பெண் குழந்தையின் உடலில், மருத்துவர்கள், உடனடியாக வைரஸ் எதிர்ப்பு மருந்தை செலுத்தினர். தற்போது, இரண்டு வயதாகும் அந்த குழந்தைக்கு, எச்.ஐ.வி., பாதிப்பு இல்லை என, கண்டறியப்பட்டுள்ளது.இதுகுறித்து, இந்த சிகிச்சை அளித்த, மருத்துவர் ஹன்னா கே கூறியதாவது:பிரசவத்துக்கு முன், தாயின் ரத்தத்தை பரிசோதிக்க, எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், பிரசவத்தின் போது, அவருக்கு, எச்.ஐ.வி., இருப்பது கண்டறியப்பட்டது.

எச்.ஐ.வி., தொற்றை கட்டுப்படுத்த, குழந்தை பிறந்து, 30 மணி நேரத்துக்குள், வைரசை எதிர்க்கும் மருந்தை, அதன் உடலில் செலுத்தினோம். ஒரு முறை தான், அந்த மருந்து கொடுக்கப்படும் என்றாலும், எச்.ஐ.வி., தொற்று அபாயம் அதிகமாக இருந்ததால், மூன்று முறை மருந்து செலுத்தப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு பின், குழந்தைக்கு, எச்.ஐ.வி., தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது.தொடர்ந்து, 15 மாதங்களுக்கு, குழந்தைக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் தரப்பட்டன.இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது அந்த குழந்தையின் உடலில், எச்.ஐ.வி., கிருமி இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.இதே போல், எதிர்காலத்தில், குழந்தை பிறந்து குறிப்பிட்ட நேரத்துக்குள், வைரஸ் எதிர்ப்பு மருந்தை செலுத்தினால், எச்.ஐ.வி., பாதிப்பில் இருந்து, மற்ற குழந்தைகளையும், காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை, ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, ஹன்னா கூறினார்.

1 comment:

  1. ஜுலை 1969 நீல் ஆம்ஸ்ட்றோங் சந்திரனில் முதன்முதல் காலடி எடுத்து வைத்தார் எனும் கதை போல இதுவும் ஒரு கதையாக இருகலாம்...
    "யாவும் அறிந்தவன் அல்லாஹ்..!"

    ReplyDelete

Powered by Blogger.