Header Ads



பொதுபல சேனாவின் கூட்டத்தில் ஆபாச வீடியோ விற்பனை - ஒருவர் கைது



(ISBAHAN SHARFDEEN)

கண்டி மாநகர பொது சந்தை முன் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுபலசேனா ஒன்றுகூடலின் போது அதற்கு அருகே நின்று ஆபாசக்காட்சிகள் அடங்கிய வீடியோ இறுவட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நகர் மோசமான ஆபாச காட்சிகள் அடங்கிய இறுவட்டுகள் விற்பனை செய்வதாக பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, பொலிசார் திட்டமிட்டு ஒருவரை அனுப்பி அவர் மூலமாக அந்த வீடியோ இறுவட்டை வாங்கி அதனை பரீட்சித்ததன் பின் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து மேலும் 20 ஆபாசப் பட இறுவட்டுகள் கைப்பற்றப் பட்டுள்ளதோடு அவை, ஒன்று  300, 400 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். கண்டி பொலிஸாரினாலேயே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 comments:

  1. இது மட்டுமல்ல இன்னம் எவ்வளவோ கேவலமான் காரியங்களை பொதுபலசேன குளு செய்யும் அதில் எதுவித சந்தேகமுமில்லை. எல்லோருக்கும் தெரிந்தவிடயம்தானே பொதுபலசேன என்றால் 100 வீதம் காடையர்கள்தான் அவர்கள் என்னென்ன செய்தாலும் அது அசிங்கமான செயற்பாடாகத்தான் இருக்கும். அவர்களின் ஆரம்பம் முதல் இன்றுவரை ஒரு விடயத்திலாவது நல்லெண்ணத்துடன் பேசி இருக்கின்றார்களா நல்லவழியில் செயற்பட்டிருக்கின்றார்களா, யோசித்துப்பாருங்கள் அவர்களின் நாகரீகமற்ற பேச்சை செயற்பாட்டினை.

    அதுபோக இராஜ தந்திரம் இராஜ தந்திரம் என்று சொல்வார்களே. அதுதான் பொதுபலசேனவுக்கு சாவுமணி அடிக்க இருக்கின்றது பொறுத்திருந்து பார்ப்பொம் பொதுபலசேனவை தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் தலைமைகள் அவர்களை எப்படி நட்டாற்றில் கைவிடுகின்றார்கள் அதனால் என்னென்ன நடக்கும் என்று சற்று பொறுத்திருந்தே பார்ப்போம்.

    ReplyDelete
  2. No wonder this is there full time job. this is the way they gather people for meeting. All the BBS members are not a monks they all riators and thoughs they wanted problems in this country this is not a quality of Monks so we wait and see

    ReplyDelete

Powered by Blogger.