சிங்களவர்களும், முஸ்லிம்களும் புத்தர் சிலையை நிர்மாணித்து திறந்து வைத்துள்ளனர்
(ISBAHAN SHARFDEEN)
இந்நாட்டில் உள்ள சகல முஸ்லிம், சிங்கள சமூகத்தினர்க்கும் முன்மாதிரியாக சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தவர்கள் இணைந்து ரூபா 4 லட்சம் செலவில் நிர்மாணித்த அழகான புத்தர் சிலைக் கூடம் ஒன்றை கலேவல பட்டிவெல கிராமத்தில் திறந்து வைத்துள்ளனர்.
கலேவல பட்டிவெல படிகனா புராண ரஜமகா விகாராதிபதி மாவுனாவே சுமனதிஸ்ஸ ஹிமி தலைமையில் பட்டிவெல சக்தி நட்புவட்ட நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த புத்தர் சிலை நிர்மாணக்கப்பட்டுள்ளது.
விழாக்கூட்டத்தில் உரையாற்றும் போது பட்டிவெல ரஜமகா விகாராதிபதி மாவுனாவே சுமனதிஸ்ஸ ஹிமி குறிப்பிடுகையில்,
‘நாட்டில் ஹலால் சான்றிதழ் குறித்து முஸ்லிம் -சிங்களவர்கள் மத்தியில் இன்று கருத்து முரண்பாடான ஒரு நிலைமை ஏற்பாட்டுள்ளது. என்றாலும், நாம் அனைவரும் இலங்கையர் என்பதை மறந்துவிடக் கூடாது. கடந்த 30 வருடங்களாக பயங்கரவாதிகளிடம் நாம் அடிவாங்கி அல்லல் பட்டுப் பெற்ற சுதந்திர நாடு, இப்படியான நிகழ்வுகளால் இரண்டுபடுவதை ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
நாம் மதங்களால் வேறுபட்டாலும் நமது உடம்பில் ஓடுவது ஒரே நிறமான இரத்தம். அது இலங்கையன் என்ற இரத்தம். நமக்குள் இருக்கும் ஒற்றுமை கூடவேண்டுமே தவிர ஒரு போதும் இல்லாமல் போக வழிசெய்யக் கூடாது. அதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியே இந்த புத்தர் சிலைக் கூடம்.
இந்த புத்தர் கூடத்திற்கு சிலையை பரிசளித்தவர் வியாபாரியான ஏ.அத்தநாயக்க அவர்கள். இந்த சிலையை சுற்றியுள்ள கண்ணாடிகளை பரிசளித்தவர் ட்ரான்ஸ் கல்ப் வெளிநாட்டு முகவர் நிலைய பணிப்பாளர் முஸ்லிம் இனத்தை சேர்ந்த எம்.ஆர்.எம் பஸ்லி அவர்கள். இந்த புத்தர் கூடத்தை திறந்து வைக்கும் வரை சிரமப்பட்டு பலவழிகளிலும் இரு இனத்தவர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். நாம் பட்டவெல கிராமவாசிகள் என்ற வகையில் இப்படி ஒரு புண்ணிய செயலுக்கு எல்லா இனத்தவர்களையும் இணைத்துக் கொள்ள முடிந்ததையிட்டு பெருமைப்படுகிறோம்.’
සිංහල මුස්ලිම් දෙපිරිසක් එකතු වී පට්ටිවෙල බුදු මැදුරක් ඉදිකර විවෘත කරති
මෙරට සිටින සමස්ත මුස්ලිම්, සිංහල ජාතිකයන්ට මහඟු ආදර්ශයක් ලබාදෙමින් සිංහල හා මුස්ලිම් ජාතිකයින් පිරිසක් එක් වී රුපියල් ලක්ෂ හතරක් වැය කොට ඉදිකළ අලංකාර බුදු මැදුරක් ගලේවෙල පට්ටිවෙල ගම්මානයේ දී විවෘත විය.
ගලේවෙල පටිටවෙල පටිගනා පුරාණ රජමහා විහාරාධිපති මාවුනාවේ සුමනතිස්ස හිමියන් ගේ අනුශාසකත්වයෙන් පටිටිවෙල ශක්ති මිතුරු සුභසාධන සංගමයේ මෙහෙයවීමෙන් මෙම බුදු පිළිම වහන්සේ නිරාවරණය කරන ලදී.
එහි දී උත්සව සභාව ඇමතූ පට්ටිවෙල රජමහා විහාරාධිපති මාවුනාවේ සුමනතිස්ස හිමියෝ මෙසේ පැවැසූහ.
‘අද රටේ හලාල් සහතිකය පිළිබඳ මුස්ලිම් – සිංහලයන් අතර මතභේදකාරී තත්ත්වයක් ඇති වෙලා තියෙනවා. එහෙත් අපි කවුරුත් අමතක නො කළ යුතුයි අපි ශ්රී ලාංකිකයෝ කියලා. අපි අවු. 30ක් තිස්සේ ත්රස්තවාදීන්ගෙන් බැට කාලා දුක් විඳලා හදා ගත් නිදහස් කරගත්ත රට මෙවන් වූ සිද්ධියක් නිසා දෙකඩ වීමට කිසිදා ඉඩ නො දිය යුතුයි.
අපි ආගම්වලින් වෙන්වුවත් අපේ ඇගේ දුවන්නේ එක ම පාට ලේ. ඒ ශ්රී ලාංකික කියන ලේ. අපි දෙගොල්ල අතර තියෙන සමගිය වැඩිවෙන්න ඕනේ මිස කවදාවත් නැතිවෙන්න ඉඩ නො හරින්න හොඳ නැහැ. ඒකට තමා හොඳ ම ආදර්ශය මේ බුදු කුටිය.
මෙම බුදු කුටියට පිළිම වහන්සේ පරිත්යාග කළේ ව්යාපාරික ඒ. අත්තනායක මහතා යි. මෙම පිළිම වහන්සේ වටා ඇති වීදුරු පරිත්යාග කළේ ට්රාන්ස් ගල්ෆ් විදේශ රැකියා ආයතනයේ අධිපතිතුමන් වූ මුස්ලිම් ජාතික එම්. ආර්. එම්. ෆස්ලි මහතාය. මෙම බුදු කුටිය විවෘත කරන තුරු ම ශ්රමය හා විවිධාකාර අයුරින් මුස්ලිම් – සිංහල දෙපිරිස ම දායක වෙලා තියෙනවා. අපි හරි ආඩම්බර වෙනවා. අපි පට්ටිවෙල ගම්මු විදිහට මෙවන් පුණ්ය කටයුත්තක් සියලූ ජාතීන් එක් රැස් කරගෙන කරන්න පුළුවන් වුණ එක ගැන’
ஹலால் பிரச்சனை வந்தது, கூடவே காவிகளின் பயமும் எம் சமுதாயத்தை கவ்விக்கொள்ள அல்லாஹ் மீதான பயம் என்ன எம்மை விட்டு விலகிக்கொள்கிறதா ?
ReplyDeleteநாம் சிலை வழிபாட்டை ஒழித்த இப்றாஹீம் நபி(அலை)யின் வாரிசுகழுக்காய் ஒவ்வொரு தொழுகையிலும் குறைந்த பட்சம் நான்கு முறை துஆச்செய்து கொண்டு, அவரின் வழிவந்த நாம் சிலை வைப்பதற்கு உதவுவதில் பெருமைப்படுகிறோமா ?
எந்த உலமா சபை அல்லஹ்விடத்தில் பரிந்துரைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறதோ?
யா அல்லாம் எம்மை நேர்வழிப் படுத்து.
asthaufirullah,,,,
ReplyDeleteஎன்ன இருந்தாலும் முஸ்லிம்கள் இந்த அளவுக்கு கீழ் இறங்கிபோய் சிர்கான விடயங்களுக்கு துணை புறியகூடாது நாட்டின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தை ஒரேநாளில் அழிதொழித்தாலும் முஸ்லிம்கள் அசல் ஈமாந்தாரிகளாக இருக்கும்வரை அதனால் அவர்களுக்கு எந்த ஒரு இழிவோ குறையோ கவளையோ கஷ்டமோ இந்த உலகிலும் இல்லை மரணத்தின் பின்னான வாழ்விலும் இல்லை எதிரிகளால் துன்புறுத்தபட்டு கொலை செய்யபடுகையில் இந்த உலகிலும் முஸ்லிம்கள் சந்ததி சந்ததிகளாக ஷஹீதுகளாகவே போற்றி விழிப்பார்கள் அதுபோன்றே மரணத்தின் பின்னாலும் மிக பெரிய நன்மாராயங்கள் அல்லாஹ்விடம் இருந்தும் காத்துகொண்டிருக்கின்றன
ReplyDeleteஆக ஈருலகிலும் வெற்றிக்கி ஒரே வழி அசலான ஈமான் ஸாலிஹான அமல் மேலே உள்ள செயல் ஈமானுடையவர்களின் ஸாலிஹான செயலாக ஒரு நாளும் ஆக மாட்டாது என்பதை எல்லோறும் கருத்தில் கொள்ள வேண்டும்!!! இஸ்லாமிய வாழ் நெறி ஈமான் ஸாலிஹான அமல்களைவிட சமாதானமும் சகவாழ்வும் சுமுகுக உறவுந்தான் முக்கியம் என்று அவைகளுக்கு தடையாக இஸ்லாமிய வாழ்கை இருப்பதாக தவறாக புறிந்துகொள்வோர் இஸ்லாத்தை ஈமானை ஸாலிஹான அமல்களை கொச்சைபடுத்தும் கேவலபடுத்தும் இழிவுக்குள்ளாக்கும் செயல்களை நேசிக்காத இஸ்லாத்தில் இருந்துகொண்டு அதன் அடையாளத்தை சுமந்துகொண்டு செய்யாமல் இஸ்லாத்தைவிட்டும் வெளியேறி விரும்பிய வாழ்வில் விரும்பிய நடத்தையில் இருந்துகொண்டு எதையெல்லாம் செய்ய நினைக்கிறார்களோ அவைகளை செய்வதே எல்லோருக்கும் ஏற்றமான சிறந்த முறையாகும்
இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமும் கிடையாது மேலும் கதவு எக்கனமும் திறந்தே உள்ளது யாரும் எந்த கனமும் வரவும் முடியும் யாறும் எந்த கனமும் வெளியேறிவிடவும் முடியும் ஏனெனில் இஸ்லாம் என்பது பிறப்பால் பிரதேசத்தால் மொழியால்,இனத்தால், பட்டம் பதவி அந்தஸ்தால் நிலைபெரும் ஒரு அடையாளம் அல்ல அது ஒரு நம்பிக்கை கொண்ட வாழ்கை நெறி அது யாரிடம் இல்லையோ அவர் எப்படி நம்பிக்கை கொண்ட வாழ்வில் இருப்பதாக தன்னை அடையாளபடுத்திகொள்ள முடியும்???