இதுதான் அமெரிக்காவின் தர்மம்
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர் டேவிட் ரந்தா (58). கடந்த 1989-ம் ஆண்டு யூத மத குரு சாஸ்கல் வெர்ஷ்பெர்கர் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கார் திருடப்பட்டது. அவரிடம் இருந்த வைரத்தை கொள்ளையடிக்க இக்கொலை நடந்தது.
இது தொடர்பாக கடந்த 1990-ம் ஆண்டில் டேவிட் ரந்தா கைது செய்யப்பட்டார். இவர் தான் இக்கொலையை செய்தார் என முடிவு செய்து இவருக்கு 37 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். எனவே இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடந்தது. முடிவில் இக்கொலையை அவர் செய்யவில்லை. குற்றமற்றவர் என தெரிய வந்தது. எனவே அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த விவரம் தெரிய 23 வருடங்கள் ஆனது.
ஆகவே அவர் தான் செய்யாத குற்றத்துக்காக 23 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தார். அவர் சிறையில் இருந்து விடுதலை ஆன போது அவரை அழைத்து செல்ல குடும்பத்தினர் வந்து இருந்தனர். அவர்களுடன் அவரது மகளும் வந்து இருந்தார். இவர் ஜெயிலில் அடைக்கப்பட்ட போது அவர் குழந்தையாக இருந்தார். இதற்கிடையே சிறையில் இருந்து விடுதலை ஆன டேவிட் ரந்தாவை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.
Post a Comment