Header Ads



விலை மதிப்புமிக்க விலங்குகளை உருவாக்க முடியும் - விஞ்ஞானிகள் நம்பிக்கை


ஜப்பானிலுள்ள ரிகென் உயிரியல் மேம்பட்டு மையம் சேர்ந்த விஞ்ஞானி 'டேருஹிகோ வகயான' கடந்த ஏழு ஆண்டுகளாக குளோனிங் மூலம் புதிய உயிரினங்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த ஏழு ஆண்டுகளில் இவர் தலைமையிலான ஆராய்ச்சி குழு 598 எலிகளை உருவாக்கி உள்ளனர். இந்த குளோனிங் எலிகள் மற்ற எலிகளைப் போன்றே வாழ்நாளும், இனப்பெருக்க திறன் கொண்டதாகவும் இருந்தது.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஒரு பாலூட்டியை கொண்டு மிக நீண்ட காலமாக நடத்தப்பட்ட குளோனிங் ஆராய்ச்சி இதுவே ஆகும். எங்கள் ஆராய்ச்சியை சரியாக பயன்படுத்தினால் விலை மதிப்புமிக்க கால்நடைகளை அதிக அளவில் உருவாக்க முடியும். பல தலைமுறைகளை இதுபோல் உருவாக்கினால், அது விவசாயிகளின் வளர்ச்சிக்கு பயன்படும். உதாரணமாக அதிக அளவு பால் கொடுக்கும் பசுவை நாம் குளோனிங் மூலம் பல தலைமுறைகளை உருவாக்க முடியும்.

சாதாரண சுழலில் வளர்க்கப்படும் ஒரு பசுவின் கன்று, பசுவின் அனைத்து உயிரியல் கூறுகளையும் கொண்டிருக்கும் என நிச்சயமாக கூற முடியாது. ஆனால் குளோனிங் மூலம் பசுவை அச்சு அசலாக உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முறையில் பரம்பரை குணங்களை தாங்கி இருக்கும் செல் நியூகிலியஸ்கள் மற்றொரு முட்டையினுள் செலுத்தப்படும். அந்த முட்டையிலுள்ள பரம்பரை நியூகிலியஸ்கள் முன்பே நீக்கப்பட்டு இருக்கும். இதனை பெண் விலங்கினுள் செலுத்தி கருவை வளர்த்து புதிய உயிரை உருவாக்குவார்கள். 

No comments

Powered by Blogger.