மரம் நாட்டுவோம்..!
மரங்களும், மற்ற தாவரங்களும் அடர்த்தியாகவும், அதைச்சார்ந்த உயிரினங்களும் வாழும் இடம் காடு எனப்படுகிறது. காலநிலை சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன. நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன. மறுபுறம் பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏன் காடுகள் தேவை
காடுகள் என்பவை, வெறும் மரங்களை மட்டும் குறிப்பிடுவதில்லை. இது வாழ்க்கை கட்டமைப்பில் (உயிர்க்கோளம்) ஒன்று. மரங்களுக்கும், காடுகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. காடுகளின் உதவியால் தான், நாம் சுவாசிக்க முடிகிறது. இதைத் தவிர நமது வீடுகளிலும், பொது இடங்களில் சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலிருந்தும் தப்பித்துக் கொள்ள மரங்களின் நிழலை தேடிச் செல்கிறோம். காடுகள் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துவதுடன், மண் அரிப்பையும் தடுக்கின்றன. தட்ப வெட்ப நிலை சீராக இருப்பதற்கு காடுகள் உதவுகின்றன.
அழியும் காடுகள்
இன்றைய சூழலில் மரங்களை பார்ப்பது அரிதாகிறது. சாலை, ரயில் பணிகளுக்காக ஏற்கனவே இருக்கும் மரங்களை அரசு வெட்டித் தள்ளுகிறது. வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டு தீயினால் மரங்கள் எரிந்து சாம்பலாகின்றன. அன்றாட பயன்பாட்டுக்காகவும் மரங்கள் வெட்டப்படுகின்றன. விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளாக மாறுவதாலும் காடுகளின் அளவு குறைகிறது.
உலக வனத்துறை சட்டப்படி, ஒரு மரத்தை வெட்டும் போது, 10 மரங்கள் நடப்பட வேண்டும். அப்படியிருந்தும் இருபது ஆண்டுகளில், ஒரு சதவீதம் மட்டுமே புதிய மரங்கள் நடப்பட்டுள்ளன.
என்ன செய்வது
பல வழிகளில் மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும் பயன்படும் காடுகளை, பாதுகாக்க வேண்டும். புதிதாக காடுகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொருவரின் வீடுகளில் ஒரு மரம் வளர்க்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் மரங்களையும் பராமரித்தால், பூமிக்கு தேவையான காடு நிலைப்பெறும். இந்திய பொருளாதாரம், விவசாயத்தையே சார்ந்துள்ளது. இதற்கு காடுகளை பாதுகாப்பது அவசியம்.
Local government offices must control cattle from eating the trees which people grow. If they cooperate with people then we can see Sri Lanka a true greeny land!
ReplyDelete