கிண்ணியா அல்அக்ஸா வீதியை அகலமாக்க நடவடிக்கை
(அபூ அஹ்ராஸ்)
பழுதடைந்து காணப்பட்ட அல்அக்ஸா வீதி தற்போது அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதன் அகலம் போதாமையினை கருத்திற் கொண்டு அதனை அகலமாக்கும் நடவடிக்கையினை கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அல் அக்ஸா பிரதான வீதியிலிருந்து ரஹ்மானியா ஜூம்மா பள்ளிவாயல் வரையான 500 மீற்றர் தூரம் கொண்ட வீதி தற்போது புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவ்வீதியினால் வாகனங்கள் அதிகமாக போக்குவரத்து செய்யக்கூடிய நிலையினையும் பொது மக்களின் போக்குவரத்திற்கும் அத்தோடு பாடசாலை மாணவர்கள் அதிகமாக பிரயாணிக்கக் கூடிய நிலையிலும் அதன் அகலம் போதாமையினை அப்பிரதேச பொது மக்கள் கிண்ணியா நகரசபை நகரபிதாவின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து உடனடி நடவடிக்கையினை எடுப்பதற்கென குறித்த வீதி அமைக்கப்படும் இடத்திற்கு வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் மற்றும் நிறைவேற்று பொறியியலாளர் ஆகியோரை வரவழைத்ததோடு அவ்விடத்தில் பொது மக்கள் மற்றும் நகரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் முன்னிலையில் கலந்து போசி உரிய தீர்வு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் நகரபிதா ஹில்மி அவர்களின் வேண்டுகோளின் நிமிர்த்தம் நிர்மாணிக்கப்படும் வீதியிலிருந்து மேலதிகமாக இருபுறமும் 1.5 மீற்றர் தேவையான சாய்வுடன் கூடியவாறு அகலத்துடன் நிர்மாணிப்பதற்கு பிரதம பொறியியலாளர், நிறைவேற்று பொறியியலாளர் இணக்கம் தெரிவித்ததை அடுத்து உடனடி தீர்வு எட்டப்பட்டதாக கிண்ணியா நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்தரணி தெரிவித்தார்.
Post a Comment