முஷாரப் பாகிஸ்தானுக்கு வருவாராயின் அவரை நரகத்திற்கு அனுப்புவோம்..!
பாகிஸ்தான் திரும்பவுள்ள முன்னாள் அதிபர் முஷாரப்பை தீர்த்துக்கட்டுவோம், இவரை கொல்ல தற்கொலைப்படையினர் தயாராகி விட்டனர் என்றும் அவரை மேல் லோகத்தில் நரகத்திற்கு அனுப்புவோம் என்றும் தலிபான்கள் ஆவேசமாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் நாளை அவர் நாடு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராய்டர் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள ஒரு வீடியோவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு,
முஷாரப் பாகிஸ்தான் திரும்பும் நேரத்தில் அவர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியோ அல்லது துப்பாக்கியால் சுட்டோ கொல்வோம். இதற்கென சிறப்பு படையினர் தயாராகி விட்டனர். இவர் கொல்லப்படுவது உறுதி என கூறியுள்ளனர்.
இந்த வீடியோவில் பேசியிருப்பது ஏற்கனவே முஷாரப்பை கொல்ல திட்டமிட்டு முயற்சி செய்த அட்னன் ரஷீத் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க தாக்குதல் நடந்த பின்னர் முஷாரப் தலிபான்களை ஒழிக்க கடும் முயற்சி மேற்கொண்டவர் என தலிபான்கள் அவர் மீது ஆத்திரத்தில் உள்ளனர்.
Post a Comment