இலங்கையில் பள்ளிவாசல்கள் தாக்குதல் - ஜெனீவாவில் எதிரொலித்தது
ஜெனீவா மனித உரிமைகள் அமர்வின் போது இன்று இலங்கை தொடர்பான உலகளாவிய காலகிரம மீளாய்வு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு முன்பதாக இந்த மீளாய்வு தொடர்பில், இலங்கை உட்பட பல நாடுகளின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதல் தொடர்பில் சுமார் 9 நாடுகள் வரை தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்டன. குறிப்பாக சீனா, ரஷ்யா, வியட்நாம், பிலிப்பீன்ஸ், வெனிசுலா உட்பட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டன.
எனினும், அமெரிக்கா, பிருத்தானியா உட்பட்ட நாடுகளும் சர்வதேச மனித உரிமை மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களும் இலங்கை நல்லிணக்க விடயங்களில் பின்னடைவை காட்டியிருப்பதாக குற்றம் சுமத்தின.
குறிப்பாக திருகோணமலை 5 மாணவர் கொலை சம்பவம், அக்ஷன் பெய்ம் 17 பணியாளர்களின் கொலை, தம்புல்லையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை, பொதுபலசேனா நடவடிக்கைகள் முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்காவின் பதவி நீக்கம், அண்மையில் வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு காணாமல் போனவர் தொடர்பில் போராட்டம் நடத்தவந்த தாய்மார் தடுக்கப்பட்டமை உட்பட்ட விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் இலங்கை மீது குற்றம் சுமத்தின.
எனினும், இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கையின் பிரதிநிதியும், அமைச்சருமான மகிந்த சமரசிங்க நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கைக்கு கால அவகாசம் தேவை என குறிப்பிட்டார்.
இலங்கையின் அரசியல் அமைப்பில் நாட்டின் பல்லின, பல்கலாசார விடயங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சர்வதேச நாடுகளும் அரச சார்பற்ற அமைப்புக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறைகள் மற்றும் கொலைகள் தொடர்பில், எவ்வித எதிர்ப்புகளையும் வெளியிடவில்லை என குற்றம் சுமத்தித்தினார்.
எந்தவொரு விடயத்தை எடுக்கும் போதும், இரண்டு பக்கங்கள் தொடர்பாக ஆராய வேண்டியது அவசியமானது.
எனினும், இலங்கை மீது குற்றம் சுமத்தும் நாடுகளும் அமைப்புக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டமை வடக்கில் இருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டமை, காத்தான்குடியில் பள்ளிவாசலுக்குள் இடம்பெற்ற கொலைகள் போன்றவை தொடர்பில், கருத்துக்களை வெளியிடவில்லை என மகிந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்
இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்களை. ஜெனிவாவில் யாரை வைத்து அல்லாஹ் பேசவைத்துள்ளான் பார்த்தீர்களா?இன்சாஅல்லாஹ்இபோது நடப்பவைகளுக்கும் இவர்கள் வாயாலேயே வாக்குமுலம் அளிப்பார்கள்.அல்லாஹ்போதுமானவன்!
ReplyDeletemuslimgalai iraiwan padukappanaha ameen!!!
ReplyDeleteyess iraiwan wallamai mikkawan awan yawadrayum arindawan.allahu akbar
ReplyDeleteallahu akbar allah utaviseyvannaka ameen...
ReplyDeleteMuslimgal Allah Sonnappirharam Valndhal Allah Nam Ninaikkadha Puraththilirundhu Engalukku Udavee Saivan,... Allah Sonnapirharam Nam Valavillayanil Allavin Tandanay Kadumaiyanadu.
ReplyDelete