Header Ads



முஸ்லிம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது என் கடமை - சரத் எக்கநாயக்கா



(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாணத்திலுள்ள 109 முஸ்லிம் பாடசாலைகளையும் அபவிருத்தி செய்வது மாகாண முஸ்லிம் கல்வி அமைச்சர் என்ற வகையில் தனது பொருப்பாகும் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்கா தெரிவத்தார்.

அக்குறணை முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

2013 03 13 மாலை இடம் பெற்ற இவ் வைபவத்தில் மேலும் உரையாற்றிய முதலமைசசர் சரத் ஏக்கநாயக்க இவ்வாரு தெரிவித்தார்.

மத்திய மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் குறிப்பிட்ட சில பாடங்களுக்கு ஆசிரியர்களது தட்டு;ப்பாடு நிலவுகின்றது. 400 ஆசிரயரகள் சேர்த்துக்கொள்ள வின்னப்பம் கோரிய போதும் 19 பேர் மட்டுமே வந்திருந்தனர்;. இருந்த போதும் மாணவர்களது கல்வியை பாதிக்க இடமளிக்க முடியாது. எனவே ஏதேனும் வளகளிலை பயன்படுத்தி ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு அனுப்புகினறோம்.

மத்திய மாகாண உறுப்பினர் ரிஸ்வி பாரூக், அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம். சிம்சான் உற்பட பலர் இதில் கலந்து கொண்டனர். தனது திறமையை வெளிப்படத்திய மாணவிகளுக்கு இங்கு பரிசில்கள்; வழங்கப்பட்டன.





No comments

Powered by Blogger.