இலங்கையில் தேசிய ஐக்கியத்துக்கு பாடுபட்ட பௌத்த தேரருக்கு மியன்மாரில் விருது
சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் கும்புறுகமுவே வஜிர தேருக்கு மியன்மார் அரசின் உயரிய கெளரவ விருதான அக்கமஹா பண்டித பட்டம் கிடைத்துள்ளது.
சங். பேராசிரியர் கும்புறுகமுவே வஜிர தேரர் வித்தியாலயங்கார தம்ம வித்தியாலய அதிபதி பதவி யையும் வகித்து வருகிறார்.
தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத அமைப்பினதும் அகில இலங்கை துறவிமார் அமைப்பினதும் தலைவராக இவர் பதவி வகித்து வருகிறார்.
ஆன்மீகப் பணிகளைப் போன்று சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றுக்கும் இவர் தேசிய மட்டத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு இந்தப் பட்டத்தை வழங்கும் ராஜ்ய வைபவம் மியன்மார் தலைநகரில் மார்ச் 26 ஆம் திகதியன்று நடைபெறும்.
Post a Comment