Header Ads



காத்தான்குடி செஞ்சிலுவைச்சங்க பொதுச் சபை கூட்டம் (படங்கள்)



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் கீழ் பிரிவுக்கிளைகளாக செயற்படும் 9 ஒன்பது பிரிவுகளில் ஒரே ஒரு முஸ்லிம் பிரிவாக செயற்படும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவுக்கிளையின் நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான 2013 பொதுச் சபை கூட்டம் (15.3.2013) நேற்று பிற்பகல் காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிட ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவுக்கிளையின் 2013 நிருவாகிகள் தெரிவு இடம்பெற்ற போது அதன் புதிய தலைவராக சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ்வும் செயலாளராக சமுர்த்தி வலய முகாமையாளர் எம்.ஏ.எம்.சுல்மியும், பொருளாளராக ஏ.எல்.நசீர் அகமட் உட்பட செயற்குழு குழு உறுப்பினர்களாக எம்.ஐ.எம்.சலீம்,எம்.எல்.அஹமட் லெவ்வை,கே.எம்.ஏ.காதர்,எம்.எச்.எம்.அன்வர்,கே.சகீபா ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யபட்டனர்.

இப் பொதுச் சபை கூட்டத்தில் பிரதம மற்றும் கௌரவ அதிதிகளாக  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் ரி.வசந்தராசா, மட்டக்களப்பு கிளையின் செயலாளர் மதி சுதன், மட்டக்களப்பு கிளையின் பொருளாளர் சக்தி வேல் ,    வார உரைகள் பத்திரிகை  பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுல்லாஹ்,சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன், காத்தான்குடி பிரிவின் முன்னாள் தலைவர் எம்.றாபியூ ,; உட்பட அதன் நிருவாக உறுப்பினர்கள், ஆண்,பெண் பொதுச் சபை உறுப்பினர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இவ் வைபவத்தின் போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவுக்கிளையில் இருந்து பொது மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய முன்னாள் தலைவர் எம்.எம்.றாபியூ, அதன் முன்னாள் செயலாளர் எம்.கே.எம்.இர்பான், உட்பட முன்னாள் செயற்குழு குழு உறுப்பினர்களான எம்.ஏ.எம்.மிப்சி, மௌலவி இர்ஸாத், ஏ.எல்.நசீர் அகமட் ஆகியோர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் ரி.வசந்தராசாவினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



1 comment:

  1. சிலுவையை இஸ்லாம் வெறுக்கும்போது,செஞ்சிலுவைச்சங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளைப்பெற ஜால்றா அடிக்கலாமா?ரெட் குறஸ் ,உதவிகளினூடாக ,மதப்பிரச்சார வேலைகளையும் செய்கின்றது என்பது ,மறைமுகமான விடையமல்ல.யூதர்களும் கிறிஸ்த்தவர்களும் அவர்களுடைய மார்க்கத்தை நீங்கள் பின் பற்றும் வரை உங்களை அவர்கள் பொருந்திக்கொள்ளமாட்டார்கள்(அல்-பகறா)தனித்துவமான ஊரைச்சார்ந்தவர்கள் தனித்துவத்தை இழக்கும்வேலைகளைச்செய்யலாமா?

    ReplyDelete

Powered by Blogger.