ஓமான் நாட்டில் பொதுமன்னிப்பு
தென் மேற்கு ஆசிய நாடு ஓமன். இதனை சுல்தான் கபூஸ் பின் சைத் அல் சைத் ஆட்சி செய்து வருகிறார். ஓமன் நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை மற்றும் ஊழலை எதிர்த்து கடந்த சில ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்பட்டது. இவர் ஆட்சியை எதிர்த்தும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களை சுல்தானை அவமதித்த குற்றத்திற்காக கைது செய்து, சிறை தண்டனை வழங்கினர். சிறையில் உள்ள இவர்களுக்கு சுல்தான் மன்னிப்பு வழங்கியுள்ளார். இவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என்று தெரிகிறது.
தண்டனை வழங்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. என்றாலும், குறைந்தது 50 பேர் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பினை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வரவேற்று உள்ளது.
Post a Comment