மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறியாட்டம் தொடருகிறது
மியான்மரில் மெய்த்திலா நகரில் முஸ்லிம்களின் குடியிருப்புகள், மசூதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் அங்கு பலர் கொல்லப்பட்டனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து அங்கிருந்து வெளியேறினர். ஆனால், இன்னும் கலவரம் ஓயவில்லை. மாறாக ரங்கூன், நேபைடா, டட்கோன் ஆகிய 3 நகரங்களுக்கும் பரவியது.
டட்கோனில் ஆயுதங்களுடன் வந்த புத்த மதத்தினர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர். ரங்கூனில் மிகவும் பரபரப்பாக இயங்கும் யுஷானா பிளாகா என்ற மார்கெட்டுக்கு தீ வைக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டன.
யமெதின் நகருக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த மசூதி மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். அதில் அவை முற்றிலும் அழிந்தன. இதுபோன்று தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு ரங்கூன், யமெதீன், டட்கோன் ஆகிய 3 நகரங்கள் நாசம் அடைந்துள்ளன.
மேலும் பர்மாவின் மத்தியில் உள்ள கோன் நகரில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் வீடுகள் மற்றும் மசூதிகளை இடித்தும், கொளுத்தியும் நாசமாக்கினர். இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
Post a Comment