Header Ads



சுவிஸ் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு



சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது வகை ரத்த பரிசோதனை கருவியை கண்டுபிடித்துள்ளனர். 14 மில்லிமீட்டர் அளவே இருக்கும் இந்தக் கருவி, ஊசியின் மூலம் மனிதனின் தோல் பகுதிக்கும் சதைக்கும் இடையே  சொருகப்படும். இந்தக் கருவியினை அடிவயிற்றுப் பகுதி, கால்கள், கைகள் ஆகிய இடங்களில் பொருத்தலாம்.   

இந்த கருவி உடலுக்குள் இருந்த வண்ணம்,  ரத்தத்தில் கொழுப்பின் அளவு, குளுகோசின் அளவு உள்ளிட்ட ஐந்து விதமான சோதனைகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும். இதன் அளவீடுகள், மருத்துவரின் செல்போனுக்கு புளுடூத் மூலம் அனுப்பி வைக்கப்படும். 

இந்தக் கருவியை உடலுக்குள் பல மாதங்களுக்கு வைத்திருக்க முடியும். இந்தக் கருவி நாட்பட்ட நோய்களால் பதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தக் கருவிகள் இன்னும் நான்கு வருடங்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 

No comments

Powered by Blogger.