Header Ads



கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு எதிராக 'திராவிடன் சேனை' என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் (விபரம் இணைப்பு)

கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய நாடுகளின் உதவியுடன் “கிழக்கிஸ்தான்” என முஸ்லிம் மாகாணமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு துணைபோகும் வகையில் தமிழர்கள் கட்டிடங்களை முஸ்லிம் வர்த்தகர்களுக்கு வழங்க வேண்டாம் என மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளிலும் அனாமதேய துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டுள்ளன.

“திராவிடன் சேனை என்ற” அமைப்பின் பேரிலேயே இந்த துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டுவருகின்றன. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இஸ்லாமிய நாடுகளின் ஆதரவுடன் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளின் வழிநடத்தலுடன் இலங்கையை எதிர்காலத்தில் இஸ்லாமிய நாடாக மாற்றும் திட்டத்தின் முதல் கட்டம் கிழக்கு மாகாணத்தை கிழக்கிஸ்தானாக மாற்றுவது.

இதனை அடிப்படையாகக்கொண்டு தமிழர் தாயகபூமியை கையகப்படுத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் வியாபார நிலையங்களை விலையாகவும் குத்தகைக்கும்பெற்று ஆக்கிரமிப்பை ஆரம்பித்துள்ளனர். தமிழர் தாயகப்பகுதிகளில் வியாபாரம் செய்யும் முஸ்லிம் வியாபாரிகளை உடன் வெளியேற்றுமாறு எமது அமைப்பு எச்சரிக்கின்றது.

அத்துடன் இந்த துரோகத்தனத்துக்கு துணைபோகும் தமிழ் கட்டிட உரிமையாளர்களே உங்கள் சொத்தை அழிவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



9 comments:

  1. இனங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த தீய சக்திகள் பலவாறும் செயற்படலாம்,
    இதில் மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேணும்!பொறுமை,அமைதி காக்க வேணும்!தீய சக்திகளை கண்டறிய முயற்சி செய்ய வேணும்!

    ReplyDelete
  2. wow..very good move....this is the time Sinhalese and Tamils should unite face their common enemy

    ReplyDelete
  3. ராஜபக்ஷ கம்பனியின் அடுத்த கட்ட சதிவிளையாடல் ஆரம்பமாகிவிட்டது.சிங்களவர்களை தூண்டிவிடுவதற்கு இனவெறிசேனாவையும் தமிழர்களை தூண்டிவிடுவதற்கு திராவிடன் சேனாவையும் பிரசவித்திருக்கிரார்கள்.திராவிடன் சேனா என்ற பெயரில் இராணுவத்தின் சீருடை அணியாத கிறிஸ்மேன் படையைக் கொண்டு இதுபோன்ற அனாமேதய துண்டுப்பிரசுரங்கள்,சுவரொட்டிகள்,இனமோதலை உண்டாக்கும் கச்சிதமான சதிமுயற்சிகள் இன்னும் சில தினங்களில் தீவிரமாக்கப்படும்.இவர்களால் தமிழ் பிரதேசத்தில் வைத்து முஸ்லிம்களும்,முஸ்லிம் பிரதேசத்தில் தமிழர்களும் தாக்கப்படலாம் அல்லது கொடூரமாக கொல்லப்படலாம்.எப்படியோ இந்த சிங்கள தமிழ் புதுவருடம் முஸ்லிம்களின் இரத்தத்தால் நனையப்போவது உறுதி.

    ReplyDelete
  4. இந்த திராவிடர் சேனை வழிதவறிப்பிறந்த குழந்தையா? ஏனென்றால் தொடர்பு வபரம் எதையுதம் காணவில்லையே அதனால் இநத சந்தேகம்.

    ReplyDelete
  5. முஸ்லிம்கழுக்கு மற்ற மதத்தவர்களிடமிருந்துதான் நிறைய கருத்துக்கள் கிடைக்குது
    சிரிப்பு சிரிப்பா வருது நோட்டிசை பார்த பிறகு

    ReplyDelete
  6. என்ன கொடுமை சார் .................

    உங்கள் கற்பனையில் என் கேள்வி .....

    கிழக்கிஸ்தானுக்கு யாரை தலைவராக்குவது ?

    முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைமைகளும் :

    225 பேர் உள்ள பாராளுமன்றத்தில் வாய் திறக்க முடியாமல் திணறுகிறோம் இதில் தனி நாடு வேற சாத்தியமா ? கிழிஞ்சது போ ! நாட்டாமை தீர்ப்ப மாத்து!

    ReplyDelete
  7. இது சிங்கள கூலிப்படையின் வேலை. சிறுபான்மை இனங்களை பூண்டோடு அழிக்க மாபெரும் திட்டம். முளு நாடும் தங்கள் வசம் வரும் என்ற சிந்தனயே.

    ReplyDelete
  8. from eastern nothing problem so government want to create the problem and tamil,muslin each other want fight and sinkalish forces want to finish the minority peoples. that way this kind of drama so minority peoples should thing keep everyone mind.

    ReplyDelete
  9. சந்தேகமில்லா BBS இன் கை வரிசை. துண்டுப் பிரசுரத்தின் தமிழ் நடையைப் பார்த்தால் BBS இல் "மகேந்திரன்" போன்ற துவேஷிகள் உள்வாங்கப் பட்டுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை.

    @ Mahendran,
    We knew that you all are very happy about current situation in sri lanka (I'm not blaming all tamil community).

    நாங்கள் இலங்கைச் "சோனகர்". எல்லோரையும் தாண்டிய பூவீகம் இந்நாட்டில் உண்டு. இதயெல்லாம் பார்த்து அஞ்சும் கூட்டம் நாமல்ல. யுத்தம் முடிந்த பிறகு கிடைத்த சுதந்திரத்தில் "துணிவாக" நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால் ஊரூராய் நீங்கள் (LTTE) எங்களைக் கருவறுக்கும் போதும் நாங்கள் "துணிவாய்த்" தான் பேசினோம். நாட்டைக் காட்டிக் கொடுக்கவும் இல்லை ஆட்சியை கவிழ்த்து நாட்டை நட்டாற்றில் விடவும் இல்லை. இந்நாட்டை நேசிக்கும் மக்கள் நாங்கள். நாடு கேட்பது சிங்கள இனத் துவேஷிகளும், தமிழினத் துவேஷிகளும் தான். நாங்களல்ல. அன்றிலிருந்து இன்றுவரை இது "சோனக" வரலாறு. காட்டிக் கொடுப்பும், ஆட்சிக் கவிழ்ப்பும் யார் வேலை என்பதை நாட்டு மக்கள் அறிவர். அதனால் தான் நல்லுள்ளம் கொண்ட தமிழ், சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் எங்களில் நல்ல மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.