வினை விதைத்தவன் வினை அறுப்பான்...!
(மௌலவி அபூ ஸஃத்)
வரம்பு மீறும் அநியாயக்காரனின் நிலை பற்றியும், இறை விசுவாசியின் நிலை பற்றியும் அல்குர்ஆனில் இறைவன் பல்வேறு வசனங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.
அல்லாஹ்வின் பிடிக்குள் சிக்கிய உலகை அடக்கியாழ்ந்த எத்தனை ஆட்சியாளர்கள்???
குர்ஆனை வாசித்தால் அவற்றைத் தெளிவாகப் படிக்கலாம்.
குர்ஆனைத் தொடவே அறுகதையற்ற, தான் கழித்த சிறுநீரைக் கூட கழுவத்தெரியாத காபிர்கள் குறை தேடுவதற்காக குர்ஆனை கையிலேந்திக்கொண்டு குர்ஆனுக்கு விளக்கம் சொல்கிறார்களாம். விவாதிக்கப்போகிறார்களாம். மகத்தான இக்குர்ஆனை டென்னிஸ் பந்தென்று நினைத்துள்ளார்கள் போலும்.
நாம் சற்று சிந்திக்கக் கூடாதா? எமது வாழ்க்கையின் யாப்பாக வழங்கப்பட்டுள்ள, ஸூரத்துல் பகராவின் ஆரம்ப வரிகளிலே ''இவ்வேதம் சந்தேகமின்றி அல்லாஹ்வை அஞசுவோருக்கு நேர்வழிகாட்டக்கூடியது'' என வர்ணித்துள்ள இக்குர்ஆனை (மொழிபெயர்ப்பை) எமது சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒருமுறையாவது வாசித்திருக்கின்றோமா?
''என்னுடைய இறைவா! நிச்சயமாக என் சமூகத்தார் இந்தக் குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்' என்று (நம்) தூதர் கூறுவார்.'' (ஸூரதுல் புர்கான்: 30)
இவ்வசம் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கக் கூடாதா?
இதோ சில உதாரணங்கள். அநியாயக்காரனின் நிலை பற்றி...
“உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? . (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள், அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?) மேலும், பெரும் படைகளைக் கொண்ட பிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?) அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர். அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர். எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான். நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்.” (ஸூரதுல் பஜ்ர்: 6-14)
“அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைவிகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள். அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை); பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள். இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்” (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்) உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?” (என்று கேட்கப்படும்). ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள். (ஸூரதுஸ் ஸாஃப்பாத்: 22-26)
“நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். அல்லது: தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் (அவ்வாறு) தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது. (ஸூரதுல் அன்கபூத்: 2-4)
இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை; அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். (ஸூரதுல் அன்கபூத்: 40)
அவ்வேதனையை அவசரப்படுத்துமாறு அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள் - ஆனால், நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக இருக்கிறது.
அந்நாளில், அவ்வேதனை அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை மூடிக் கொள்ளும். (அப்போது இறைவன்) “நீங்கள் செய்து கொண்டிருந்த(தின் பய)னைச் சுவைத்துப் பாருங்கள்“ என்று கூறுவான்.
ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது; ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதேயாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
(ஏனெனில்) அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்; மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். (ஸூரதுல் அன்கபூத்: 54-59)
மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.
(அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங் கொண்டு) சூனியமாக இருக்கும்.
எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்; “எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்” என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்,) “உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்க வில்லையா?” (என்றும்)
அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும் உங்களுக்கு தெளிவாக்கப்பட்டது; இன்னும் நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).
எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்தபோதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது.
ஆகவே, அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த தன் வாக்குறுதியில் மாறு செய்வான் என்று (நபியே!) நீர் எண்ண வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பழிவாங்குபவனாகவும் இருக்கின்றான்.
இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.
இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்.
அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.
அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்.) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். (ஸூரா இப்ராஹீம்: 42-52)
(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது. (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: “இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;” ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். (ஸூரதுல் கஹ்பு: 29)
மேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ளயாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாம நாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள்; மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும். அன்றியும் அவர்கள் சம்பாதித்த தீமைகள் அவர்களுக்கு வெளியாகும், மேலும், எதைக் கொண்டு அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். (ஸூரதுத் துமர்: 47-48)
ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.
இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது; (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?” என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.
மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (மறைவாகக்) கடைக்கண்ணால் பார்த்த வண்ணமாகவும் அவர்கள் (நரகத்தின் முன்) கொண்டுவரப் படுவதை நீர் காண்பீர்; (அவ்வேளை) ஈமான் கொண்டவர்கள் கூறுவார்கள்: “எவர் தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை தேடிக் கொண்டார்களோ, கியாம நாளில் நிச்சயமாக அவர்கள் முற்றிலும் நஷ்டவாளர்தாம்.” அறிந்து கொள்க! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள். (ஸூரதுஷ் ஷூறா: 42-45)
அல்குர்ஆனை வாசித்து படிப்பினை பெறுவோம். மன நிம்மதியும், ஆறுதலும் அடைவோம்.
மௌலவி அபூ சஹ்த் அவர்களின் இக்கட்டுரை வரவேற்கத்தக்கது. வெறுமனே வாசித்துவிட்டு போகாது, இதன் கருப்பொருளை நாம் ஒவ்வொருவரும் சற்று சிந்தனை செய்ய வேண்டும்.
ReplyDeleteஎமது நாட்டில் எத்தனை எத்தனையோ அரபு மதரஸாக்கள் உள்ளன. எத்தனையோ மௌலவிமார்களும், கற்றறிந்த மேதைகளும் உள்ளனர். நாங்கள் எமது சிறார்களுக்கு புனித அல்குர்ரானை அரபியில் ஓதுவதற்கு மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பயிற்ருவிக்கின்றோம்.(எம்மில் சிலர் இது பற்றி சற்றேனும் கவலைப்படுவேதே இல்லை).
நாம் ஒவ்வொருவரும் தமக்கே கேட்டால் சிறந்தது - வாழ்நாளில் குறைந்தது ஒரு தரமாவது நமக்கு தெரிந்த மொழியில் குர்ரானை விளங்கியிருக்கின்றோமா என்று!
இக்கால கட்டத்தில், காபிர்கள் குர்ரானைபற்றி விளங்க எடுக்கின்ற முயற்சிகளில் நாம் எந்தளவு எடுக்கின்றோம் என்பதுதான் கேள்விக்குறி!
முஸ்லிமாய் பிறந்துவிட்டோம் என்று மார்புதட்டிகொல்வதால் ஆன பயன் என்ன? இஸ்லாமிய கடமைகளை எம்மில் எத்தனை பேர் விளக்கத்துடன் செய்கிறார்கள்? இவ்வாறான கேள்விகள் தொடர்ந்துகொண்டு செல்லும்! இதுபற்றி எழுதினால்....
இஸ்லாமிய கோட்பாடு, ஷரியா, இறைவணக்கம், இறைவழி முதலியவைகளை மேலோட்டமாக நுனிப்புல் மேயாது, ஒவ்வொருவரும் தத்தமது தாய் மொழியில் பூரணமாக விளங்க முயற்ச் சிப்போமாக!!
மாசால்லாஹ்..
Why my previous reasonable comments was not published about this article...?
ReplyDelete