துருக்கி - ஈரான் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாய் குண்டுவைத்து தகர்ப்பு
ஈராக்கில் இருந்து துருக்கி வழியாக பல்வேறு நாடுகளுக்கு 'பைப் லைன்' மூலம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து மெடிட்டேரனியன் கடலில் உள்ள துறைமுகம் வழியாக இந்த கச்சா எண்ணெய் கப்பல்கள் மூலம் உலக நாடுகளில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களை சென்றடைகின்றன.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கும் ஈராக்கின் பொருளாதாரம் பெரும்பாலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியையே சார்ந்துள்ளது. இந்நிலையில், துருக்கி நாட்டிற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய பைப் லைனை இனம் தெரியாதவர்கள் குண்டு வைத்து தகர்த்தனர்.
இதனால், துருக்கிக்கு செல்லும் கச்சா எண்ணெய் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த குழாய் செல்லும் பாதை நெடுகிலும் தீப்பிடித்து எரிவதால் எண்ணெய் சப்ளையை பாஜி சுத்திகரிப்பு நிலையம் முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடும், விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
Post a Comment