வடமாகாணத்தில் காணி கொள்ளையில் ஈடுபட்டது யார்..?
சிங்களப் பத்திரிகையொன்றில் அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் காணிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்று வெளியான செய்தி குறித்து வட மாகாண மீள் குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் செயலாளர்.எஸ்.பீ.திவாரத்ன அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்அவ்வறிக்கையின் முழு வடிவத்தையும் இங்கு தருகின்றோம்.
'அரசின் பிரபல அமைச்சர் பாரிய காணிக் கொள்ளை' என்ற தலைப்பில் லக்பிம செய்தித் தாளில் வெளியாகிய தலைப்புச் செய்தியும், அது தொடர்பாக அதன் 6 ம், 20 ம் பக்கங்களில் உள்ள விடயங்களும் சம்பந்தமாக, வட மாகாண மீள் குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் என்ற வகையில் விளக்கம் அளிக்க வேண்டும் என நினைக்கின்றேன்.
அச்செய்தியினால் இலக்கு வைக்கப்பட்டுள்ள அமைச்சரின் மீது குற்றச் சாட்டுக்கள் பல சுமத்தப்பட்டுள்ளதனாலும், இன ரீதியின் அடிப்படையில் காட்டு நில அபகரிப்பு இடம் பெறுவதாகவும், இடம் பெயர்ந்தோரை மீள் குடியேற்றுவது தொடர்பான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் காணி கோருவது, வட மாகாணத்தில்; முஸ்லிம் இன வலயமொன்றை உருவாக்குவதற்காகவே என்பன போன்ற விடயங்களினால் தோன்றக் கூடிய பொய்யான தகவல்களை திருத்துவதற்காக விடயங்களைத் தெளிவுபடுத்தல் அவசியம் என நான் நினைக்கின்றேன்.
1. வட மாகாண மக்களின் இடப் பெயர்வு
வட மாகாணத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் ஆரம்பமான 1970 தசாப்தத்தின் இறுதிப் பாதி முதற் கொண்டு அம்மாகாண மக்கள் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்ல ஆரம்பித்தனர். இன ரீதியாக நோக்குமிடத்து, ஆரம்பம் முதற் கொண்டே சிங்கள மக்களையும், 1990 ம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம் மக்களையும் வட மாகாணத்திலிருந்து விரட்டியடிப்பதற்கு பயங்கரவாதிகள் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். அவ்வாறு இடம் பெயர்ந்தவர்களின் உடைமைகள் அனைத்தையும் பயங்கரவாதிகள் அபகரித்ததுடன், அவர்களுக்கு சொந்தமாயிருந்த காணிகள் பெரும்பாலானவற்றில் தமிழ் மக்கள் குடியேற்றப்பட்டனர். நலன்புரி முகாம்களில் தங்கி இருந்த மேற் கூறப்பட்ட இடம் பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்துவதற்கான ஒழுங்கான நடவடிக்கைகளை அரசு 2009 ம் ஆண்டு மேற்கொண்ட பின்னரே அம்மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செலவதற்குரிய வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டியது.
2. நலன்புரி முகாம்களில் தங்கி இருந்த இடம் பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்தல்.
புலி பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த குடி மக்களை, 2009 மே மாதம் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் அரச படைகள் மீட்டெடுத்த பின்னர், அவர்களுக்கு இருப்பிட வசதி செய்து கொடுப்பதற்காக பாரிய நலன்புரி கிராமம் ஒன்று அரசாங்கத்தினால் நிறுவப்பட்டது. 2009 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை முடிவடையும் நிலையில் அந்த நலன்புரி நிலையங்களுக்கு வந்து அவ்வாறு தங்கியிருந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 292,000 ஆகும். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட மீள் குடியமர்த்தும் நடவடிக்கையின் போது, அரச நலன்புரி நிலையங்களில் உள்ளக இடம் பெயர்ந்தவர்களாகத் தங்கியிருந்த தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. பயங்கரவாதிகளின் பணிப்புரை, விரட்டியடித்தல் ஆகிய செயல்களினால் சிங்கள, முஸ்லிம் மக்கள் ஏலவே நீண்ட காலமாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தமையினால், அந்த நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தவர்கள் முற்று முழுதாக தமிழ் மக்களே. 2009 இலிருந்து 2012 வரை அவ்வாறு இடம் பெயர்ந்து வாழ்ந்த தமிழர்களைப் போன்றே, தமது வாழ்விடங்களிலிருந்து இடம் பெயர்ந்து தத்தமது உற்றார் உறவினர் வீடுகளில் தங்கியிருந்த மற்றைய தமிழ் மக்களும், இந்த நடவடிக்கையின் போது, தத்தமது சொந்த இடங்களில் மீள் குடியேறச் சென்றமையினால், 2012ம் ஆண்டு முடிவின் போது 142,000 குடும்பங்களை மீள் குடியேற்றக் கூடியதாக இருந்தது. இக்காலப் பகுதியில் எல்லா வித்திலும் மீள் குடியேறியவர்களை கருதும் போது, அவர்களில் 117,017 தமிழ் குடும்பங்களாக இருந்த போது, முஸ்லிம் குடும்பங்கள் 22,134ம் சிங்களக் குடும்பங்கள் 4,913ம் ஆகும்.
மீள் குடியமர்த்தும் நடவடிக்கையின் போது மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்ட வேளையிலும் கூட, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உள்ளூர் காரியாலயம் மற்றும் உள்ளூர், வெளிநாட்டு அரச சார்பற்ற ஸ்தாபனங்களின் அளப்பரிய உதவிகள் கிடைக்கப் பெற்றது அந்த மக்கள் மீள் குடியமர்த்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே ஆகும்.
அம்மக்களின் சார்பாக உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் பாராட்டைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு, நலன்புரி நிலையங்களை நடாத்துவதிலும், மீள் குடியேற்றத்தை ஆரம்பித்த வேளையிலும் அப்பணிகளுக்கு பொறுப்பான அமைச்சராக செயலாற்றியவர் கௌரவ ரிஷாத் பதியுத்தீன் ஆவார். இந்த பொறுப்புமிக்க தேசிய பணிகளை இன வேற்றுமைகள் எதுவமின்றி வழுவற நிறைவேற்றுவதற்கு அவரிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு மறக்கவொண்ணாது.
3. வட மாகாண முஸ்லிம்கள் இடம் பெயர்ந்தமை
வட மாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் தொடர்பான புள்ளி விபரங்கள், ஜனாதிபதி செயலணியின் கவனத்திற்கு ஆளானது. 1981 ம் ஆண்டின் குடிசன புள்ளி விபர அறிக்கையின் படி, வட மாகாணத்தில் வாழ்ந்த மொத்த சனத் தொகையில் 4.6மூ முஸ்லிம்களாவர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த சத வீதம் 1.5ம், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் 5மாக இருந்ததோடு, மன்னார் மாவட்டத்தில் 26.09 ஆகவும் இருந்தது. வடக்கில் பயங்கரவாத செயற்பாடுகள் தோற்றம் பெற்ற ஆரம்ப கட்டத்தில், முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம் பெறவில்லையெனினும், 1990ம் ஆண்டு எல்டீடீஈ இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமொன்றுக்கு அமைய, வட மாகாணம் தமிழர்கள் மட்டும் வாழும் பிரதேசமாக இருக்க வேண்டும் எனக் கொள்ளப்பட்டு, முஸ்லிம்கள் அனைவரும் 1990 அக்டோபர் மாதம் முடிவதற்கு முன்பதாக வட மாகாணத்தை விட்டு வெளியேற வேண்டுமென பணிக்கப்பட்டிருந்தது.
அப்படி வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் புத்தளம் மாவட்டத்திற்கும், ஏனையோர் அனுராதபுரம், குருனாகலை, கொழும்பு ஆகிய வேறு பிரதேசங்களுக்கும் சென்றனர். 1981 ம் ஆண்டின் குடிசன புள்ளி விபர அறிக்கையின் படி, வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் சனத் தொகை 50,831 ஆகும். அந்த எண்ணிக்கையில் 27,717 பேர் மன்னார் மாவட்டத்தில் குடியிருந்துள்ளனர். 1990 இல் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 63,145 என்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித குடியிருப்பு ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் காணக்கிடைக்கின்றது.
மன்னார் மாவட்டத்தில் 1981ம் ஆண்டில் குடியிருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 27,117 ஆயினும், பின்னர் மீள் குடியேற்றப்படும் சந்தர்ப்பத்தில், மீள் குடியேற்றப்படுவதற்காக பிரதேச செயலாளர் அலுவகங்களில் பதிவு செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 65,531 ஆயிருந்தது. 1981ம் ஆண்டின் குடிசன புள்ளி விபர அறிக்கையின் படி, வட மாகாணத்தில் முஸ்லிம் குடும்பமொன்றின் சராசரி அங்கத்தவர் தொகை 5.43 ஆகும். புத்தளம் அரச அதிபரின் அறிக்கையின்படி, வட மாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்து புத்தளத்திற்கு வந்த முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை 2009ம் ஆண்டில் 19,251 ஆகும். இந்த ஆகக் குறைந்த எண்ணிக்கையைக் கருதும் போது, புத்தளத்தில் மாத்திரம் தங்கியிருந்த அந்தக் குடும்பங்களின் சனத் தொகை ஒரு இலட்சத்தை அண்மிப்பதோடு, நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு குடியேறியவர்களின் எண்ணிக்கையை இதனோடு சேர்க்கம் போது, இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
முஸ்லிம் மக்களை மீள் குடியமர்த்தல்
மீள் குடியேற்ற செயற்பாட்டின் போது தலையாய பணியாக பொறுப்பாக்கப்பட்டிருந்த, நலன்புரி முகாம்களில் தங்கியருந்த தமிழ் மக்களை மீள் குடியேற்றுவதற்கு அவசியமான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, பல தசாப்த நீண்ட காலமாக இடம் பெயர்ந்து வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களை மீள் குடியமர்த்தல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டது.
2012 ஜுலை மாத முடிவின் போது, வட மாகாணத்தின் மாவட்டங்கள் ஐந்திலும் குடியமர்ந்த முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை 22,134 ஆக இருந்ததாக பிரதேச செயலாளர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 15,321 குடும்பங்கள் மன்னார் மாவட்டத்திற்கே திரும்பி வந்துள்ளனர்.
இந்த மக்கள் மீள் குடியமர்வதற்காக தமது பூர்வீக வசிப்பிடங்களுக்கு திரும்பி வந்தாலும், அங்கு குடியமர்வதில், அவர்களுக்கு பெரும் தடைகள் பல தோன்றின. அதனால், அப்படி மன்னாரில் குடியமர்வதற்காக திரும்பி வந்த 15,321 குடும்பங்களில், அங்கு தமது சொந்த இடங்களில் நிரந்தரமாகக் குடியமர்ந்த குடும்பங்கள் 7,828 மட்டுமாக இருந்த வேலை, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு திரும்பி வந்ததாக அறிவிக்கப்பட்ட 2,744 குடும்பங்களில், அங்கு தமது சொந்த இடங்களில் நிரந்தரமாகக் குடியமர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 2,060 மட்டுமே என, 2012ம் ஆண்டு ஜுலை மாதம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி தெரிய வந்ததோடு, 2012ம் ஆண்டின் குடிசன புள்ளி விபரங்களின்படியும் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு இந்த நிலை உருவாவதற்கு பிரதான காரணமாக விளங்குவது காணி சம்பந்தமான பிரச்சினையாகும்;. கற்ற பாடங்கள், நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்னிலையில் ஆஜராகிய சாட்சிகளின்படி, ஆணைக் குழு இந்த பிரச்சினையை சரியாக விளங்கிக் கொண்டதோடு, இந்த மக்களின் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், ஆணைக் குழுவின் அறிக்கையில் 6.18 பந்தியில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
விசேடமாக மன்னார் மாவட்டத்தின் அமைவை நோக்கும் போது, சமதரைப் பிரதேசமான மன்னார் பெருநிலத்தில், குடியிருப்பதற்குப் பொறுத்தமான மேட்டு நிலம் மிகவும் அரிதாயிருப்பதோடு, பெரும்பாலும் வயல் வெளிகளின் நடுவிலுள்ள சிறு மேட்டு நிலங்களிலேயே மக்கள் குடியிருக்கின்றனர். ஆதலினால், அவர்களுடைய கிராமங்களை விஸ்தரிப்பதற்கு போதிய இடவசதி இல்லை. அப்படிச் செய்வதாக இருந்தால், அவர்களுடைய வயற் காணிகளை நிரப்ப வேண்டியேற்படும். சில பிரதேசங்களில், 1995ம் ஆண்டில் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களிலிருந்து எல்டீடீஈ பின் வாங்கி வரும்போது, பலாத்காரமாகவோ அல்லது அவர்களின் விருப்பத்துடனோ, அவர்களது கிராமங்களுக்கும், அயற் பிரதேசங்களுக்கும், அவர்களுடனேயே சென்று, அதிக சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் அல்லது சிங்களவர்கள் கை விட்டுச் சென்ற காணிகளை மக்கள் மத்தியில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். முஸ்லிம்களின் கிராமங்களை விஸ்தரிப்பதற்கு இருந்த இடங்களிலும் கூட, அவர்களை குடியமர்த்தியதினால், முஸ்லிம்கள் மீள் குடியேறுவதற்கும், தமது கிராமங்களை விஸ்தரிப்பதற்கு இருந்த இடங்களும் இல்லாமற் போய் விட்டன. வவுனியா மாவட்டத்திலும் இந்நிலையே உருவாகியுள்ளது. இந்த நிலைமை முஸ்லிம் மற்றும் சிங்கள இனங்கள் இரண்டையுமே ஒரே மாதிரியாக பாதிக்கும் விடயமாகும்.
ஜனாதிபதி செயலனி, கற்ற பாடங்கள், நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளையும் கவனத்திற் கொண்டு, முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினையை இனங்கண்டு, அந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றை காணும் வகையில், இரண்டு வழி முறைகளைக் கையாண்டது.
மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளரின் தலைமையின் கீழ், காணி ஆணையாளர் நாயகம், வன பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம், வன விலங்கு பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி செயலனியின் பிரதிநிதிகள் ஆகியோர்களடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டு, கிராமம் கிராமமாக தனித்தனியாக ஆய்வு நடாத்தி, அவர்கள் மீள் குடியமர்வதில் அதிக தாக்கம் செலுத்தும் இடப் பற்றாக்குறையின் தன்மையை ஆராய்ந்து, உசிதமான இடங்களை பாசீலனை செய்து, பரிந்துரைக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இக்குழுவினால் இதுவரை மன்னார் மாவட்டம் தொடர்பில் மாத்திமே பரிசீலனை மேற்கொள்ளக் கூடியதாக இருந்துள்ளது. மேற் கூறிய குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, காணி அமைச்சு, அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட காணிகளை மீண்டும் பரிசீலனை செய்து, அதனடிப்படையில் ஏனைய மாவட்டங்களின் நிலைமைகளையும் பரிசீலனை செய்வதற்கு விசேட குழு ஒன்றை நியமித்துள்ளது.
இதற்கிடையில், மேற்படி குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவாறு, புத்தளம் மாவட்டத்திலிருந்து திரும்பி வரும் குடும்பங்களுக்கு அவசியமான முழுக் காணியளவையும், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் குடியிருந்த பிரதேசங்களிலிருந்தாயினும் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதனால், அதனை விடவும் விசாலமான நிலம் அவசியப்படுவதாக, சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களிடமிருந்து வேண்டுகோள்கள் கிடைக்கப் பெற்றன. இது சம்பந்தமாக பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பிறகு, அவ்வாறு அவசியப்பட்ட காணி அடையாளம் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலணியினால் முஸ்லிம் குடும்பங்கள் தொடர்பாக முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, வன பாதுகாப்பு மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகங்களின் கீழ் வரும் நிலங்களிலிருந்து காணிகளை விடுவித்துக் கொள்வதற்குத் தேவையான விண்ணப்பங்களை முறையாகத் தயாரித்து, சூழல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு, அது தொடர்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகளையும், காணி பெற்றுக் கொள்வதற்கு தகுதியுடைய மீள் குடியேறுபவர்களின் தகைமைகளையும், இதற்காக இடம் பெயர்ந்த குடும்பங்களைத் தெரிவு செய்வதற்கான முறையைப் பற்றியும் எழுத்து மூலமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரச அதிபர்களின் வேண்டுகோள்களுக்கேற்ப, சூழல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின்படி, மேற் குறிப்பிடப்பட்ட முறையில் அடையாளம் காணப்பட்ட அரசாங்க காட்டு நிலங்களை வன பாதுகாப்பு பணிப்பாளர் நாயகத்தினால் பிரதேச செயலாளரிடம் கையளிப்பதற்கான செயற்பாடுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது உண்மையாகும். அவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஏதாவது காணித் துண்டு, அரச சரணாலயத்துக்கு உட்படுமேயானால், அந்தக் காணியை பகிர்ந்களிப்பதை நிராகரிப்பதற்கான அதிகாரத்தை வன பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் கொண்டுள்ளார். ஆகையினால், 2,388 ஏக்கர் வன சரணாலய நிலம் ஆபத்துக்குள்ளாவதற்கு எந்த விதமான காரணங்களும் இல்லை.
மேல் குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்படும் காணி பகிர்ந்தளிப்பு மேற்கொள்ளப்படுவது, இடம் பெயர்ந்த, காணியற்ற பெரும் எண்ணிக்கையான மக்களை மீள் குடியமர்த்துவதற்காகவே. அந்த நடவடிக்கையை உரிய முறையில் செயல்படுத்துவது தொடர்பாக, வட மாகாணத்தில் காணி பரிபாலனம் சம்பந்தமாக கடைப்பிடிக்க வேண்டிய சட்ட ரீதியான செயற்பாடுகள் பற்றி அண்மையில் வெளியிடப்பட்ட மேற் கூறிய சுற்றறிக்கையில் முதற் தடவையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலைமையின் கீழ், அந்த மக்கள், தமது பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டோரும் அவர்களுடைய குடும்பத்தவர்களும், அவர்கள் திரும்பி வந்து தமது இடங்களில் குடியிருத்தல், அந்த இடங்களுக்கு வேறெவரும் உரிமை கோராதிருத்தல் ஆகிய அடிப்படை விடயங்களின் கீழ், அவர்கள் குடியிருக்கும் இடங்களுக்கு அவர்களுக்கு உரித்துரிமை இருக்கும் பட்சத்தில், அதனை உறுதிப்படுத்தும் கடிதங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன், அந்த உறுதிப்படுத்தும் கடிதங்களை, அவர்களுடைய இடத்துக்குரிய உரிமையை ஊர்ஜிதப்படுத்தும் ஆவணங்களாகக் கருதி, அவர்களுக்கு வீடு வழங்கப்படும் போது காரியமாற்றுமாறு, ஜனாதிபதி செயலணியினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, காணி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களின்படி செயற்பட வேண்டியுள்ளதால், மேற்படி காணி தொடர்பாக இவர்களுக்கு சட்ட ரீதியான அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகையில், காணி ஆணையாளரின் சுற்றறிக்கைகளில் உள்ள ஏற்பாடுகளின்படியே செயற்பட வேண்டியுள்ளது.
இந்த முறைப்படி, சட்ட ரீதியாக கடைப் பிடிக்கப்படும் முறைமையான செயற் திட்டத்தின் அடியொற்றி, வட மாகாணளத்தில் மீள் குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்களின் காணி சம்பந்தமான மனிதாபிமான பிரச்சினை தொடர்பாக உசிதமான நடிவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், முன் கூறப்பட்ட செய்தியில் முன் வைக்கப்பட்டுள்ள விடயங்களின் ஊடாக, கௌரவ அமைச்சர் பற்றிய தவறான கருத்து மக்கள் மத்தியில் உருவாகக் கூடியதாக இருப்பதனால், அந்நிலையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது உசிதமானதென பரிந்துரை செய்ய விரும்புகின்றேன்.
Hello mr mahendran did u forget o u r acting like that what did they do in mosque?
ReplyDeleteTo Gowrishankar!
ReplyDeleteI think you don't know what happened to Northern muslim society in 1990 by LTTE Terrorist. Because those days you all the supporters of LTTE terrorist and now acting as a cat. Now no body cannot block our resettlement in Mannar district. Our honorable minister taking all the legal action regarding this issue even though manner magistrate and some others disturbance.
I think Mr maheendran would be no no must be a member ofLTTE those days they killd all the politicians now they want politicians help what you do only what you get. if you dont want to give legal rights to others how can you get மனம் போல் தான் வாழ்வு உங்கள் எண்ணங்களுக்கு தனி நாடு மட்டுமல்ல தன்னாட்ச்சி உரிமை கூட கிடைக்காது. ஆட்சி அதிகாரம் கையில் இல்லாத போதே இந்த ஆட்டம் என்றால் ஆட்சி உங்கள் கையில் இருந்தால் நாடு தாங்காது. இலங்கையில் உங்களைத் தவிர யாரும் இருக்க முடியாது. அப்படி இருந்தாலும் உங்கள் மாமனும் மச்சானும் தான் பதவியில் இருப்பார்கள் இது தான் கடந்தகால வரலாறு. சும்மா இனவாதமாக விமர்சனம் பன்ன வேண்டாம் அது பூமராங்காக திருப்பித்தாக்கும்
ReplyDeleteதிரு மகேந்திரன் ,அவர்களே உங்களுக்கு தலை சரியில்லை எனில் நல்லதொரு வைத்தியரைக்கண்டு மருந்து எடுங்கள்.
ReplyDeleteகிழக்கில் என்ன நடந்ததென,என்னென்ன நடத்தினீர்கள் என உங்கள் திருவாளர்களான பிரபாகரனிடமும் , கருணாவிடமும் , பிள்ளயானிடமும், IPKF இடமும் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
இரண்டாயிரம் ரூபாவுக்காகவும் , ஒரு மோட்டார் சயிக்கலுக்காகவும் கூட்டிக்கொண்டுபோய் கொலைசெய்த கூட்டம் நீங்கள்.
my dear muslim friends... ya i've checked with karuna what happened in east and he said lot of murders in mosques then he told me to check what happened to tamils there so as he said i checked ... the tamil people in East told me all the horror news about you brothers....if you forgot how you genocide the tamils and raped innocent tamil girls pls check with your muslim village guards there....and killing the non-muslims is not the new to you all...check your muslim history first.
ReplyDeleteநீங்கள் கிழக்கில் செய்த படுகொலையை பட்டியல் இடவா ?
ReplyDelete1.கொக்கட்டிச்சோலைப் படுகொலை
2.பொத்துவில் படுகொலை
3.சத்துருக்கொண்டான் டிப்போ படுகொலை
4.வீரமுனைப் படுகொலை
5.உடும்பன்குள படுகொலை
தனிநபர் கொலை,கடத்தல் கற்பழிப்புக்கள் ஏராளம்
---
உங்களுடைய இணையம் இவ்வளவு கீழ்தரமாக தமிழ் மக்களின் நெடிய போரட்டத்தை விமர்சித்து ஒரு முஸ்லீம் இனவாத அடிப்படைவாதத்தை உண்டு பண்ணிவிட்டீர்கள் .. எனக்கு நல்ல நண்பனா தெரிந்த முசுலீம் எல்லாம் எனக்கு தூரோகி போலவே தோன்றுகின்றது காரணம் உங்களை போன்ற மதவாதிகள் தான்.. விரைவில் உங்களுக்கு எதிராக ஒரு இணையத்தை உருவாக்கி நீங்கள் செய்த கொலைகளை அம்பலப்படுத்துவேன் தமிழ் அன்னை மேல் சத்தியம்...
விரைவில் விரிவாக இணையத்தில் அம்பலப்படுத்துவேன்
To Kmalan,
ReplyDeleteNow not only the Srilankan, the world know what did the LTTE to Muslim society. Recently Min. Samarasinghe also address regarding this issue in UN. Therefore don not try to put your personal allegation to muslim community. We are the witness when Gorilla Terrorist Prabakan killed tamil people you all celebrated. We know yours mentality.
Congrats Naathan.... pls create a website and bring all those massacre details.
ReplyDelete