காத்தான்குடியில் காய்க்கத் தொடங்கும் பேரீத்தம் மரங்கள் (பிரத்தியேக படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான காத்தான்குடி பிரதேசத்தில் முஸ்லிம்களின் வரலாற்று முக்கியத்துவமிக்க பேரீத்தம் மரங்கள் அரபு நாடுகள் போன்று காத்தான்குடி பிரதான வீதியிலும் பேரீத்தம் மரங்கள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வின் முயற்சியினால் மட்டு-கல்முனை நெடுஞ்சாலை காத்தான்குடி பிரதான வீதியில் மாத்திரம் 79 பேரீத்தம் மரங்கள் அண்மையில் நடப்பட்டிருந்தன.
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகம் உஷ்னம் நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிமான பேரீத்த மரங்கள் பூத்தும், காய்த்தும் வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமான மரங்களில் அதிகமான பேரீத்தம் பழங்கள் அறுவடை செய்ய முடியும் என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கிறார்.
குறித்த 79 பேரீத்த மரங்கள் காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே போன்று காத்தான்குடி பிராதான வீதியில் வீதியை அழகுபடுத்த அல்லாஹ் என்ற எழுத்து பிஸ்மில்லாஹ் என்ற எழுத்து ,குர் ஆன் வடிவிலான சதுக்கம் போன்ற மூன்று ரவுண்டபோட்கள் நிறுவப்பட்டுள்ளதோடு பூ மரங்களும் பூ செட்டியில் வைக்கப்பட்டுள்ளதோடு காத்தான்குடி வரவேற்பு பழகையும் அமைக்கப்பட்டுள்ளது.
Post a Comment