Header Ads



இது சாபக்கேடா..? விஞ்ஞான வளர்ச்சியா..??



மரபணு நோய்கள் கொண்ட பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. 6,500 குழந்தைகளில் ஒருவர் இந்த மரபணு நோய் கொண்டதாகப் பிறக்கிறது. இத்தகைய குறைபாடுகளை நீக்கி அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக விளங்க விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போது இங்கிலாந்து நாட்டின் நியூகாசில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், பெண்ணின் கருமுட்டையில் இருக்கும் நோய்த்தன்மை கொண்ட திசுக்களை அகற்றி மற்றொரு கருமுட்டையில் இருக்கும் ஆரோக்கியமான திசுக்களை இணைப்பதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையைப் பெறலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். 

இதன்மூலம் பக்கவாதம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறுகள், மனநலக் குறைபாடுகள், குருடு, குறைப் பிரசவம் போன்ற 50-க்கும் மேற்பட்ட நோய்கள் அடுத்த தலைமுறையினரை தாக்காமல் பாதுகாக்கலாம். ஒரு தந்தை, இரண்டு தாய் என்ற கோட்பாடு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற ஐயப்பாடு எழுந்ததில், மக்கள் இத்தகைய ஏற்பாட்டினை வரவேற்கவே செய்கின்றனர். இது ஒன்றும் பாதுகாப்பற்ற முறை அல்ல என்றும், குழந்தை பிறந்த பின்னரே இம்முயற்சியின் பலன்பற்றி அறியமுடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

இங்கிலாந்தில் சோதனை முயற்சியிலேயே இருக்கும் இத்திட்டம், அமெரிக்காவில் செயல்படுத்தப்பட்டு குழந்தைகள் பிறந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இது ஒரு குடும்பத்தின் நன்னெறி குறித்து தீர்மானிக்கின்ற செயலாக இருந்தாலும், இம்முயற்சி வெற்றிபெற்றால், ஆரோக்கியம் மட்டுமில்லாமல், குழந்தையின் நிறம், கண்களின் நிறம் போன்ற அனைத்து விஷயங்களையும் ஒருவர் விரும்பும் வண்ணம் தீர்மானித்துக் கொள்ளமுடியும்.

1 comment:

Powered by Blogger.