பள்ளிவாசல் மீது தாக்குதல் - இலங்கைக்கு எதிராக வாக்களிக்க மலேசியாவிடம் வலியுறுத்து
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைபேரவைக்கூட்டத்தில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்திற்கு மலேசியா ஆதரவாக வாக்களிக்வேண்டும் என்று மலேசியாவின் மனித உரிமை அமைப்பான சுவராம் அமைப்பின் தலைவர் கே.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் மலேசியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் குருட்டுக் கண் கொண்டு பார்க்காமல் மலேசியாஇலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு இடையிலான யுத்தத்தில் 10,000 ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இன்னும் சிலர் முகாம்களில் வசிக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை மனித உரிமை மேம்பாட்டு விடயங்களில் திருப்தி அடைய முடியாது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறும் கோரியுள்ளார்.
Post a Comment