நிந்தவூரில் இரத்ததான நிகழ்வு
(சுலைமான் றாபி)
நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான நிகழ்வு கடந்த 02.03.2013ம் திகதி (சனிக்கிழமை) நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா பள்ளி வாசலில் இடம்பெற்றது. பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் ஹைருல்லாஹ் மௌலான தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி அதிகாரி Dr திலினி மற்றும் தாதியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு இரத்தங்களை சேமித்தனர்.
இந்நிகழ்வில் 150 இரத்த தானம் செய்பவர்கள் கலந்து கொண்ட போதும் இதில் 120 பேர்களே இரத்தங்களை வழங்கியதாக அல் ஈமான் அழைப்பு வழிகாட்டல் மையத்தின் தலைவர் றியாஸ் மௌலவி தெரிவித்தார்.
இதே வேளை நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா பள்ளி வாசல் ஒவ்வொரு வருடமும் இரத்த தான நிகழ்வினை நடாத்தி வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
Post a Comment