Header Ads



இந்தியாவுடன் உறவு வேண்டாம் - சம்பிக்க ரணவக்க


இந்தியாவுடன் எந்த தொடர்புகளும் இல்லாத ஏனைய ஆசிய நாடுகளுடன் சகோதரத்துவத்துடனான வெளிநாட்டு கொள்கைளை கட்டியெழுப்புமாறு ஜாதிக ஹெல உறுமய அமைச்சருமான சம்பிக்க ரணவக்க அரசாங்கத்தை கேட்டுள்ளார்.

இலங்கையின் இறையாண்மையை புறந்தள்ளி விட்டு, இந்தியாவுக்கு வர்த்தக அல்லது ராஜதந்திர சிறப்புரிமைகளை வழங்க வேண்டாம் எனவும் அரசாங்கத்திடம் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தமது கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.  இலங்கைக்கு தொடர்ந்தும் எதிர்ப்பை வெளிகாட்டி வரும் தமிழ் நாட்டுடனும் எந்த வர்த்தக தொடர்புகளை எதிர்காலத்தில் இலங்கை முன்னெடுக்கக் கூடாது.  எதிர்காலத்தில் வரும் மேற்குலக பொருளாதாரத்திற்கு ஈடுகொடுக்கும், தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசியா ஆகியவற்றை கேந்திரமாக கொண்ட பொருளாதாரத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை இறையாண்மையுள்ள நாடு என்ற வகையில், பலமிக்கது எனக் கூறப்படும் ஜெனிவா யோசனைக்கு அடிப்பணியாது தொடர்ந்தும் உண்மை, நேர்மைக்காக தொடர்ந்தும் மக்களுடன் செயற்படுவோம்.  இடம்பெற்றதாக கூறப்படும் குற்றம், கொலை தொடர்பாக சுயாதீன விசாரணைகளை நடத்தவும்,  நாட்டின் சட்டம், ஒழுங்கு தொடர்பாக தேடியறிய இடமளிப்பதை நாங்கள் நிராகரிக்கின்றோம். இதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது.

இந்த விசாரணைகளும், சட்டம் மற்றும் ஒழுங்கை இந்தியாவிலேயே தேட வேண்டும். இலங்கையில் அல்ல.  முக்கியமாக தமிழக அரசியல்வாதிகளான ஜெயலலிதா, கருணாநிதி, காங்கிரஸ் கட்சி ஆகிய தரப்பினர் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் கொலைகளுக்கு முற்றாக பொறுப்புக் கூறவேண்டும். இந்தியா இலங்கைக்கு எதிராக எடுத்த தீர்மானத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கைக்கு ஆதரவு வழங்கிய ஏனைய தெற்காசிய நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பது, ஒத்துழைப்புகளையும் வழங்குவோம்.  இந்தியா, இலங்கையின் இறையாண்மையை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்வதில்லை. திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகிறது.

இந்தியாவுக்கு, இலங்கையில் வழங்கும் சலுகைகளை நிறுத்துமாறு அரசாங்கத்தை நாம் கேட்டுக்கொள்கிறோம். இந்த அரசாங்கம் சரியில்லை என்ற அடுத்த தேர்தலில் இந்த அரசாங்கம் மாறும்.  நாம் எந்த சக்திகளுக்கும் தலைவணங்க மாட்டோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் எதனை கூறினாலும் நாடு என்ற வகையில் நாம் வெற்றி கொண்ட நாட்டை பாதுகாத்து கொள்ள முன்னோக்கி வருமாறு நாம் எதிர்க்கட்சி மற்றும் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். 

3 comments:

  1. This fellow is a fanatic with chronic psychosis.
    He should be sent to Angoda for life-time treatment.

    ReplyDelete
  2. அரசாங்கமே சொல்கின்றது இந்தியாவின் உறவு மிகமுக்கியமென்று ஆகவே முந்திரி அவர்களே உமது செயல்பாடும் பேச்சும் சற்று நாட்களாக அவதானிக்கக்கூடியதாகத்தான் இருக்கிறது. எதற்கும் நீங்கள் நல்லதொரு மனோதத்துவ வைத்தியரை நாடுவது மிக நல்லது.

    ReplyDelete
  3. Already Sri Lanka Is in 21st century if don't have any international trade .. it will go back again to 10th or 09th century .??

    ReplyDelete

Powered by Blogger.