Header Ads



சிங்கப்பூரிலிருந்து பேரியல் அஸ்ரப்பை மீள் அழைக்க பொதுபல சேனா வலியுறுத்து


(அஸ்ரப் ஏ. சமத்)

முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரபைக் கூட பொதுபல சேனா   விட்டுவைக்கவில்லை.  அரசாங்கத்திடம் சிங்கப்புர் தூதுவராக கடமையாற்றும் பேரியல் அஸ்ரபை மீள அழைக்குமாறும் ஞானதேரர் அரசிடம் அரை கூவல் விடுப்பதாக கூறினார்.

இன்று ஹர்த்தால் நாடத்தும் கடைகளை நிரந்தரமாக முடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் பொதுபலசேன தேரர் தெரிவித்தார்.

நேற்று பொது பல சேன அமைப்பின் செயலாளர் கபொட ஞானாசார தேரர் பாணந்துறையில் நடத்திய கூட்டத்தில் தெரிவித்த கருத்து  நேற்று இரவு சுவர்வாஹினி,ஹிரு ரீ.விகளில் இன்றைய சிங்கள பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் அஸ்ரப்  இரண்டு கொள்கலனில் ஆயுதங்கள் கொண்டு வந்தாகவும் தெரிவித்தார். சிங்கப்பூரில் தூதுவராக கடமையாற்றும் பேரியல் அஸ்ரப் பௌத்தர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அங்கு வாழும் பொளத்தர்கள் ஆதராபூர்வமாக பொதுபல சேனாவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தாh மலரவிருக்கும் புத்தாண்டை சிங்களப் புதுவருடம் எனக் கொண்டாட வேண்டாம். இலங்கையின் புதுவருடம் எனக் கொண்டாடுங்கள் எனச் பேரியல் சொல்லியிருக்கின்றார். இலங்கையின் சுதந்திர நிகழ்வின்போது சிங்கள பாடல்களை இசைக்கா வேண்டாம் எனச் சொல்லி தடை விதித்துள்ளதாக  பொது பல சேன செயலாளர் பாணந்துரையில் தெரிவித்தார்.

1 comment:

  1. aiyo pawam kadsiyai aliththu vagkiya tholil knavarum mannikka maddar

    ReplyDelete

Powered by Blogger.