தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸா மீட்பு
(அனா)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனைப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமி ஒருவரது சடலம் (31.03.2013) மாலை மீட்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி – காவத்தமுனை பாடசாலை வீதியைச் சேர்ந்த ஆதம் லெப்பை பர்மிலா (வயது – 13) என்பவரின் சடலமே தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இச் சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பணிப் பெண்னுக்கான பயிற்சியை முடிக்கும் பொருட்டு கொழும்பு சென்ற நிலையில் குறித்த சிறுமி தனது சகோதரியின் வீட்டில் இருந்துள்ளார்.
விஷேட தேவையுடைய இச் சிறுமி இன்று பிற்பகல் 04 மணியளவில் குளிக்கச் செல்வதாக கூறிச் சென்ற இவர் பின்னர் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து பொலிஸாரின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment