றிஸானாவின் குடும்பத்தினரிடம் நிதி கையளிப்பு (படங்கள்)
காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்ட றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதி நேற்று ஞாயிற்றக்கிழமை மாலை முதூர் ஷாபி நகரிலுள்ள றிஸானாவின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.
இதன் போது காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்ட றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியிலிருந்து செலவு தவிர்ந்த ஏனைய நிதியான ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் இதன் போது றிசானாவின் தந்தையான நபீக்கிடம் கையளிக்கப்பட்டது. அத்தோடு 50 நூல்களும் இதன் போது றிசானாவின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டன.
Post a Comment