டுபாயின் பியோ கோல்ட் ஜூவலர்ஸின் முதலாவது கிளை கண்டியில்
(JM.Hafees)
டுபாயை தலைமையகமாகக் கொண்டு பத்து நாடுகளில் இயங்கும் 'பியோ கோல்ட் ஜூவலர்ஸ்' Pure Gold Jewellers தனது முதலாவது கிளையை கண்டியில் ஆரம்பித்து வைத்துள்ளது.
கண்டி நகருக்கு மெருகூட்டும் நவீன வசதிகள் கொண்ட கண்டி சிட்டி சென்றர் நவீன கட்டிடத் தொகுதியில் கோலாகளமாகத் திறந்து வைக்கப்பட்ட திறப்பு விழா வைபவத்தில் சிட்டி சென்றர் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான துசித விஜேசிங்க பிரதம அதிதியாகக் கலந்து மேற்படி காட்சி கூடத்தைத் திறந்து வைத்தார்.
காலப் போக்கில் மொத்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உற்பத்தி என்பவற்றை மேற்கொள்ள இந் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2016ம் ஆண்டு முடிவடைய முன் இலங்கையில் 30 கிளைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, கட்டார், குவைத், பஹ்ரைன், ஓமான், ஜோர்த்தான் , இந்தியா, மாலைத் தீவு, இலங்கை ஆகிய பத்துநாடுகளில் தமது கிளைகளைக் கொண்டுள்ளது.
மாலைத் தீவு மற்றும் இலங்கைக்கான நிறைவேற்று அதிகாரியான கிறீஸ் வீரசிங்க அங்கு தெரிவித்ததாவது.
இலங்கை ஆபரணச் சந்தையானது உயிர்ததுடிப்புக் கொண்ட ஒரு சந்தையாகும். அப்படியான ஒரு சந்தையில் கண்டி மாநகர் போன்ற இடத்தில் எமது கிளை திறக்கப்பட்டது எமக்கு மகிழ்சியளிக்கும் ஒரு விடயமாகும். இவ்வாறான ஒரு சந்தை நிலைமையில் பிரவேசிப்பது எமக்கு உச்சாமூட்டுகிறது.
1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பியோ கோல்ட் ஜூவலரிஸ் நிறுவனம் சர்வதேச வாடிக்கையாளர்களைக் கவரும் வித்ததில் ஆபரணக் கலைக்கு புதிய கண்ணோட்டத்தையும் பெருமானத்தையும் வழங்கியுள்ளது. தற்கால மங்கையர்களின் இரசனைக்கேற்ப பிரதி பலிப்புக்களை வழங்கும் எமது நிறுவனம் சர்வதேச சான்றிதழ் பெற்ற ஒரு நிறுவனமாகும். எமது தரம் மிக உயர்ந்த தரமாகும். எமது வாடிக்கையாளர் சேவைத் திட்டம் ஒவ்வொரு சந்தையிலும் முன்மாதரியாக அமைந்துள்ளது. இலங்கை மக்களது இரசனையை ஈடுசெய்யும் வகையில் எமது துலங்கள் இருக்கும் என நாம் எதிர் பார்க்கிறோம் என்றார்.
podusenykku tereyadoo dubai muslim nadu enru
ReplyDelete