கட்டாரில் தலிபான் போராளிகள் அலுவலகம் திறப்பார்களா..?
தலிபான்களுடன் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை துவங்க ஆப்கன் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தலிபான்களுக்கு கத்தாரில் அலுவலகம் திறப்பது பற்றி அந்நாட்டு மன்னருடன் ஆலோசிப்பதற்காக ஆப்கன் அதிபர் கர்சாய், கத்தாருக்கு செல்கிறார்.
ஆப்கனிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் கடந்த 2001ம் ஆண்டில் நுழைந்து, தலிபான்களை வேட்டையாடினர். அதன்பின், அதிபர் கர்சாய் தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. எனினும், ஆப்கனில் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தலிபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை துவங்குவதற்காக ஆப்கன் அதிபர் கர்சாய் விரைவில் கத்தாருக்கு செல்லவிருக்கிறார். இது பற்றி, ஆப்கன் அரசு செய்தி தொடர்பாளர் ஜனான் மோசஷை நேற்று கூறுகையில், ‘தலிபான்களுக்கு கத்தாரில் அலுவலகம் திறப்பது பற்றியும், அவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதில் அந்நாட்டு அரசையும் சேர்ப்பதற்காகவும் கத்தாருக்கு அதிபர் செல்கிறார். அங்கு அந்நாட்டு மன்னர் கலிபாவுடன் பேச்சு நடத்தவுள்ளார்’ என்றார்.
Post a Comment