Header Ads



முன்னாள் பிரதமருக்கு முஸ்லிம் அமைச்சர்கள் அவசர கடிதம்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஹலால் நெருக்கடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று  நியமிக்கப்பட்டது. இந்தக்குழு இனிமேல் ஒன்றுகூடாதென அறிவிக்கப்பட்டதையடுத்து விசனமடைந்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் கையொப்பமிட்டு அவசர கடிதமொன்றை ரட்ணசிறி விக்கிரமநாயக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

4 பிரதான முஸ்லிம் அமைச்சர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். ஹலால் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவை உடனடியாக கூட்டுமாறு வலியுறுத்தியே முஸ்லிம் அமைச்சர்கள் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர்.

முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஆதரவளித்து மேலும் சில அமைச்சர்களும் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளதாக அமைச்சர் வட்டாரங்களிலிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

9 comments:

  1. Jokers of Sri Lankan cabinet.these stooges are not just selling the community for wealth,but betrayers.

    ReplyDelete
  2. பஷீர் சேகுதாவூத் அமைச்சர் எங்க போயிட்டார்...... நல்ல விசுவாசமா இருகாரு போல...
    நீங்க எல்லாம் கூடியும் ஒன்னும் கிழிக்கப் போறல்ல.... போட்டுட்டு உங்கட வேலையையும், மனைவி புள்ளைகளப் பாருங்க.......

    ReplyDelete
  3. ஏன் இவ்வளவு நாளும் மயக்கதில இருந்தாங்களோ பாவம் நடிச்சா இன்னும் சமூகம் நம்பும் என்ற நம்பிக்கையோடு வாழும் சின்ன புத்திகொண்ட நடிக்ர்களாகவே இவர்கள் இருந்தால் எப்படி??? எத்தனை நாளைக்கிதான் இவங்க இப்ப்டி சின்னபுள்ளதனமா மக்களை மடையர்கள் என நினைத்துகொண்டிருக்கபோகின்றனர்???

    ReplyDelete
  4. எழுதுங்கோ எழுதுங்கோ என்ன நடக்குமென்று எங்களுக்குத் தெரியும். எல்லாம் கண் துடைப்புத் தானே.

    ReplyDelete
  5. Those people s are real monaafiques

    ReplyDelete
  6. முன்னால் பிரதமருடைய தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டிருந்த குழுவின் முடிவுக்கு காத்திருக்காமல் முந்தியடித்துக்கொண்டு உலமாசபை தன்னிச்சையாக முடிவெடுத்து தனது முதிர்ச்சியின்மையை வெளிக்காட்டியது என்றும் இன்னும் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பி உலமாசபையின் முடிவை கொச்சைப்படுத்தி பல பதிவேற்றங்களையும் செய்த எமது மேதாவிகள் தற்போது எங்கே போய்விட்டார்கள்???

    ReplyDelete
  7. saheer sariya keattinga MEATHAVIHAL ENGEY POITTAANGA....

    ReplyDelete
  8. Ivang Ellaraiyum Ootukku anuppanum sally samabrichu oor suthi chaldra podathan ivvalukalm ponichu. pullaigalla casino anupp balai ilukk ivang oruthanum sari varamattanol.

    ReplyDelete
  9. நம் நாட்டில் அரசுக்கென்று சிங்களவர்களிடம் ஒரு பொது பல சேனா, ஒரு ஹெல உறுமய, ஒரு தேசிய முன்னணி போன்ற இயக்கங்கள் உள்ளது போல,

    அரசுக்கென்று முஸ்லிம்களிடம் உள்ள பொது பல சேனாக்கள்தான் ஸ்ரீலமுகா, அஇமுகா மற்றும் தேசிய காங்கிரஸ்.

    ReplyDelete

Powered by Blogger.