Header Ads



'விரும்பி விண்ணப்பிக்கும் சகலருக்கும் ஹலால் சான்றிதழ்' என்ற தீர்மானம் அவசியம்..!

சிங்கள இனவாதிகளால் தோற்றுவிக்கப்பட்ட ஹலால் விடயத்தில் ஜம்இய்யத்துல் உலமாவின தடுமாற்ற அறிக்கைகள் கவலை தருவதாக உள்ளதாக முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் சமகால நிகழ்வுகளை ஆராயுமுகமாக கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, இனவாதிகள் ஜம்இய்யத்துல் உலமாவின் ஹலால் பத்திரம் வழங்குவதற்கெதிராக இனவாதத்தை கக்கிய போது இது விடயத்தை விட்டுக்கொடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டையே ஜம்இய்யத்துல் உலமா முதலில் கொண்டிருந்தது. ஹலால் வழங்கல் என்பது யாருக்கும் பலாத்காரமாக வழங்கப்படுவதல்ல என்பதனால் இந்நிலைப்பாட்டை நாமும் பகிரங்கமாக  வரவேற்றோம். ஆனால் திடீரென முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹலால் சான்றிதழ் வழங்கப்போவதாக ஜம்இய்யத்துல் உலமா அறிவித்தது அதிர்ச்சியை தந்நதது. இதன் மூலம் ஹலால் பத்திரம் பெறும் முஸ்லிமல்லாத நிறுவனங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதோட பொதுபல சேனாவின் இனவாதத்துக்கு பணிந்ததாகவும் ஆகியது.

    அதன் பின் ஹலால் விடயத்தை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என ஜம்இய்யத்துல் உலமா திடீர் அறிக்கை வெளியிட்டது. இதை எதிர் பார்த்திருந்த பொதுபல சேனா அரசாங்கம் இதனை பொறப்பேற்க கூடாது என அறிவித்தது. அரசாங்கமும் தாம் இதனை ஏற்பதில்லை என அறிவித்ததன் மூலம் 75 வருட வரலாற்றைக் கொண்ட ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோள் புறந்தள்ளப்பட்டு 10 மாத வரலாறு கொண்ட பொதுபல சேனாவின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதனாவது அரசாங்கத்தின் தந்திரம் வெளியாகியது. ஜம்இய்யத்துல் உலமா ஏன் இவ்வாறான திடீர் முடிவுகளை மேற்கொண்டது என்பது புரியவில்லை. இது தாமாக மேற்கொண்ட முடிவா அல்லது அரசின் பிழையான வழிகாட்டலுக்கு உலமா சபை பலியானதா என்பது தெரியவில்லை.

    உண்மையில் ஜம்இய்யத்துல் உலமா ஹலாலை எந்தவொரு இனத்துக்கும் பலாத்காரமாக பிரயோகிப்பதில்லை என்பதால் பொது பல சேனாவின் கோரிக்கைக்கு தாம் இணங்க முடியாது என்றும் தாம் இவ்வாறு ஹலால் பத்திரம் வழங்குவதை அனுமதிப்பதா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என அறிவித்திருந்தால் பந்து அரசின் பக்கம் சென்றிருக்கும். மாறாக அவசரப்பட்டு அரசாங்கத்தை பொறுப்பெடுக்க்ககோரி அதனை அரசு மறுத்து விட்டதன் மூலம் இப்போது பாரிய தர்ம சங்கடத்துக்குள் உலமா சபை தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    பொதுவாக ஜம்இய்யத்துல் உலமாவின் நிர்வாகம் என்பது, பொதுவான விடயங்கள் பற்றி சில விளக்கங்களை மட்டும் கொண்ட சிலரால் நிர்வகிக்கப்படுவதால் இது விடயத்தில் அனுபவமுள்ளவர்களை அழைத்து தீர ஆலோசிக்கப்படவில்லை என்பதே இத்தகைய தடுமாற்ற நிலைப்பாடுகள் மூலம் புரிகிறது.

    ஆக, ஹலால் பத்திரம் வழங்குவதை அரசாங்கம் பாரமெடுக்க வேண்டும் என அரசை கெஞ்சுவதை விடுத்து விரும்பி விண்ணப்பிக்கும் சகலருக்கும் இச்சான்றிதழ் வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டை ஜம்இய்யத்துல் உலமா எடுப்பதே தன்மானமுள்ள சமூகத்துக்கு ஏற்றது என்பதே எமது கட்சியின் கருத்தாகும் என முபாறக் மௌலவி கூறினார்.

2 comments:

  1. I would Like to request Mr.Mubarak, that please stop criticizing others and do your works in proper way without blaming others!

    ReplyDelete
  2. Jazakallah for your thoughts and comment. i want you ask you that, when there is situation to take decision by ACJU, why don't you guys together,discuss and suggest your opinions. Posing to media with different actions won't solve issues. If ACJU is not coordinating discussions, why don't you make it happens as your are leader of a forum in Sri Lanka. we don't need leaders who just point out issues in society and expose it others, but we want leaders who draft and execute solutions for the benefit of society and country.

    so for goad saying , avoid just such comments and get together with every one to solve issues. If BBS is uniting public and other high rank individual , why we cant do it, first initiate it. if you guys talk with good intention Allah will help for sure. Our prayers with you all.

    ReplyDelete

Powered by Blogger.