Header Ads



கப்பம் கேட்கும் ஜம்மியத்துல் உலமா சபையை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்


அரசாங்கத்தில் கப்பம் பெறும் குழுவொன்று இருக்குமாயின் அரசாங்கத்தில் உள்ளவர்களை கைதுசெய்ய வேண்டும்.  சாதாரணமாக நாடு ஒன்றில் வரிகளை அறவிடுவது அரசாங்கம்.  சாதாரண மக்கள் வரிகளை அறவிட முடியாது. நாம் வரிகளை அறவிட்டால் அதற்கு பெயர் கப்பம்.  உலமா சபையினர் கப்பம் பெறும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர் என சிங்கள ராவய அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  ஜம்மியத்துல் உலமா கப்பம் பெறும் நடவடிக்கை போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்பு அனைத்து பொருட்களையும் ஹலாக்கி விட்டுள்ளது. ஹலால் இலச்சினையை பெற ஒரு நிறுவனம் குறைந்தது  1.5 லட்சம் ரூபாவை செலுத்த வேண்டும். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும்  4 ஆயிரத்து 856 பொருட்களில் ஹலால் சான்றிதழ் உள்ளது.
ஜம்மியத்துல் உலமா உற்பத்தி பொருட்களில் வரிகளை அறவிடுகிறது. இது சட்டவிரோதமானது.  இதனால் ஜம்மியத்துல் உலமா என்ற கப்பம் பெறும் நபர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் எனவும் தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Ivanval ellam Manda Karayanval. Abandamana poygalai makkalukku solli avanvalda madaththayum mariyathayum avanvale kuli thondi pudaikkaporanval.

    ReplyDelete
  2. அறிவில்லாதவர்களுகளுக்கு அறிவூட்டுவது தர்மம் செய்வதற்குச்சமனான காரியமென்பது அனைது மதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம், ஆகவே மேற்குறிப்பிட்டவரின் செவ்வியிலிருந்து அவர் கல்வியில் மிகவும் பின் தங்கியிருப்பது தெட்டத்தெளிவாக் உணரக்கூடியதாகவுள்ளது ஆகவே இதுபோன்ற மூடர்களுக்கு உலகம் சம்மந்தப்பட்ட பொதுஅறிவு சற்றும் இல்லையென்பது கவலைக்குரிய விடயம். மனிதனாகப்பிறந்தவன் சாதாரணமாக சிந்திது பேசும் ஆற்றல் பெற்றவன் ஆனால் பொதுபலசேன, ஜாதிக ஹெல உறுமய, சிங்ஹல ராவய சம்பிக்கரனவக்க போன்ற தனிப்பட்ட மனிதனோ அல்லது ஒரு இயக்கமோ சற்றும் கூட அறிவில்லாதவர்களாகவே இருக்கின்றார்கள் இவர்களின்செயற்பாடுகள் மூடர்களின் செயல்பாடுகளாகவே உள்ளன, நாகரீகமற்ற காடைத்தனமானவர்களாகவே உள்ளார்கள், இனத்துவெறியர்களாகவே திகழ்கிறார்கள்.

    தெட்டத்தெளிவான ஆதாரங்களும் செய்திகளும் வெளிப்படையாகவுள்ள இக்காலகட்டத்தில் இவர்கள் வெளிக்கொண்டுவரும் செய்திகள் மிகவும் அறிவற்ற அல்லது மனவியாதிக்குரியவர்களின் பேச்சுக்கு நிகரானது போலவே உள்ளது. இதற்கு அரசாங்கமும் அத்துடன், இவர்கள் பெளத்தர்கள் என்றவகையில் பெளத்தமத்தலைவர்களும் புத்திஜீவிகளும்தான் இவர்களுக்கு சரியான பதில்தரவேண்டும்.

    ReplyDelete
  3. இது கப்பமா இல்லையா என்பதைப்பற்றி தனியாக விவாதிக்க வேண்டியுள்ளது.. ஆனாலும் நாம் இந்த நாட்டின் சீருடை அணியாத பொலிஸ் என்று சொல்லிக்கொண்டு சட்டத்தைக் கையில் எடுத்திருக்கும் இவர்களைப்பற்றி என்னவென்று சொல்ல??

    ReplyDelete
  4. Let your boss to arrest the chief'S SLS and ISO first.

    ReplyDelete
  5. நம்ம எப்படித்தான் புரிய வெச்சாலும் இந்த தேரோக்களுக்கு புரியுதேயில்ல. தேர முத்தி மோக்கயா மாறிட்டோ ????

    ReplyDelete

Powered by Blogger.