Header Ads



முஸ்லிம்களை வெறுக்கும் அரசாங்கமும், அரசாங்கத்தை நேசிக்கும் முஸ்லிம்களும்



(ஏக்கூப் பைஸல்) 

இலங்கைக்கு எதிரான ஜெனீவாவில் இடம் பெற்ற மனித உரிமைப் பிரேரணைக்கு ஆதரவாக  இந்தோனேசியா, குவைத், மாலைத்தீவு . கட்டார் , சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய 06 நாடுகள்  வாக்களித்ததையிட்டு மகிழ்சியடைகின்றோம்.

பொது நிகழ்வுகளுக்கு சர்வ மத பிரார்த்தனைகள் வழமையாக நடைபெறுகின்ற நிலையில்  மத்தள ராஜபக்ச விமான நிலைய திறப்பின் போது வழமைக்கு மாற்றமாக பௌத்த மத வழிபாட்டினை மட்டும் செய்து முஸ்லிம்ளை புறக்கணித்தாலும்  முஸ்லிம் நாடுகள் இலங்கையை புறக்கணிக்கவில்லை. இந்த நேரத்தில் இலங்கை அரசாங்கம் மிக நிதானமாக செயற்பட வேண்டும். உலகின் எல்லாப் பாகங்களிலும் இலங்கையர்கள் இருக்கின்றார்கள். முஸ்லிம்கள் இலங்கையில் சிறுபான்மை ஆனால் உலகில் பெறும் பான்மை .    

முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தும். ஆஸாத் சாலியின் அலுவலகத்தை பொலிஸார் முற்றுகை இட்டதை முஸ்லிம்களாகிய நாங்கள் கண்டிக்கின்றோம்.  நம்முடைய அரசியல் நிர்ணயச் சட்டம் அயல் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும்,குடிகாரர்களுக்கும் ,மக்களுடைய பிரதி நிதிகளுக்கும் பாதுகாப்பை கொடுத்து வருகின்றது '

3 comments:

  1. Islamic Republic of Mauritania, is an Arab Maghreb country in West Africa.
    so total 7 Muslim countries voted in favor of Srilanka.

    ReplyDelete
  2. what happen in the srilana ?

    ReplyDelete
  3. குடும்ப ஆட்சி நடக்கின்றது நாங்க இப்படித்தான் வாழவேண்டும் என்பத விதி

    ReplyDelete

Powered by Blogger.